உலக சாதனை படைத்த எல்லையோர சாலைகள் கட்டுமான அமைப்பின் அடல் சுரங்கம் !!

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் மனாலி – லே இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் எல்லையோர சாலைகள் அமைப்பு கட்டமைத்த அடல் சுரங்கம் உலக சாதனை ஒன்றை புரிந்துள்ளது.

அதாவது 10,000 அடி உயரத்தில் கட்டப்பட்ட உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கம் என்ற சாதனையை புரிந்துள்ளது, இது உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.

இந்த அடல் சுரங்கம் மிக கடுமையான நிலபரப்பில் கடுமையான பனிப்பொழிவு குளிர் ஆகிய சவால்களை தாண்டி கட்டி முடிக்கப்பட்டுள்ளது, சில நேரங்களில் சுரங்கத்தின் உள்ளே -45 டிகிரி வரை குளிர் நிலவும் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லையோர சாலைகள் அமைப்பின் இயக்குனர் ஜெனரலான லெஃப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் சவுதிரியை இங்கிலாந்தை சேர்ந்த உலக சாதனைகள் புத்தகத்தின் இந்திய பிரதிநிதி சந்தித்து அதற்கான சான்றிதழை வழங்கினார்.