அமெரிக்க கடற்படையானது தற்போது உலகின் மிக வலிமையான கடற்படையாகவும் அதிக அளவில் பெரிய கலன்கள் கொண்ட கடற்படையாகவும் திகழ்கிறது.
இந்த நிலையில் எதிர்காலத்திலும் தனது ஆதிக்கத்தை தொடர அமெரிக்கா திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது அதன்படி எதிர்கால திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
12 விமானந்தாங்கி கப்பல்கள்,
9 நிலநீர் போர்முறை விமானந்தாங்கி கப்பல்கள்,
60 நாசகாரி கப்பல்கள்,
70 அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்கள்,
12 அணுசார் அணு ஆயுத நீர்மூழ்கிகள்,
50 ஃப்ரிகேட் கப்பல்கள்,
100 உதவி கப்பல்கள்,
150 ஆளில்லா கப்பல்கள்
ஆகியவை அடங்கிய பட்டியலை அமெரிக்க கடற்படையின் தலைமை நடவடிக்கைகள் அதிகாரி நேற்று வெளியிட்டுள்ளார்.