பாக் உடனான எல்லையில் ஆஃப்கனில் அமெரிக்கா விட்டுச்சென்ற ஆயுதங்கள் கண்டுபிடிப்பு !!

  • Tamil Defense
  • February 20, 2022
  • Comments Off on பாக் உடனான எல்லையில் ஆஃப்கனில் அமெரிக்கா விட்டுச்சென்ற ஆயுதங்கள் கண்டுபிடிப்பு !!

பாகிஸ்தான் உடனான எல்லை கட்டுபாட்டு கோடு பகுதியில் ஆஃப்கானிஸ்தானில் நேட்டோ படைகள் விட்டுச்சென்ற ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மூத்த ராணுவ அதிகாரி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

நேட்டோ படைகள் விட்டு சென்ற அதிநவீன ஆயுதங்கள், கருவிகள் மற்றும் இரவில் பார்க்க உதவும் கருவிகள் இந்தியாவில் ஊடுருவும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளால் பயன்படுத்தி வரப்படுகிறது.

மேலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆஃப்கானியர்களின் நடமாட்டம் அதிகரித்து உள்ளதாகவும் நூற்றுக்கணக்கான ஆஃப்கன் சிம்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பாட்டில் இருப்பதாகவும்

இந்தியாவுக்குள் அமெரிக்க மற்றும் நேட்டோ ஆயுதங்களுடன் ஊடுருவ முயன்ற பல பாகிஸ்தான் பயங்கரவாதிகளை இந்திய படையினர் கடந்த சில மாதங்களில் கொன்றுள்ளதாகவும் 19வது காலாட்படை டிவிஷனின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் அஜய் சந்த்பூரியா கூறினார்.