ரஷ்ய கடல் பகுதிக்குள் அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் ஊடுருவியதா ??

  • Tamil Defense
  • February 14, 2022
  • Comments Off on ரஷ்ய கடல் பகுதிக்குள் அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் ஊடுருவியதா ??

ரஷ்யா தனது போர்கப்பல் ஒன்று பசிஃபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள தனது கடல்பகுதியில் அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் ஒன்று ஊடுருவியதாக குற்றம்சாட்டி உள்ளது.

மேலும் சர்வதேச கடல்சார் விதிமுறைகளை மீறியதன் மூலமாக தனது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அமெரிக்காவின் செயல்பாடு குந்தகம் விளைவித்துள்ளதாக ரஷ்யா காட்டமாக விமர்சனம் செய்துள்ளது.

ஏற்கனவே உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையே கருத்து வேறுபாடு நிலவி வரும் நிலையில் இந்த குற்றசாட்டு பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இதுபற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் அமெரிக்க நீர்மூழ்கி கப்பலை ரஷ்ய போர் கப்பல் கண்டுபிடித்து மேல் பரப்பிற்கு வர உத்தரவிட்ட நிலையில் வெளியே வராமல் அப்படியே எல்லையை விட்டு வெளியேறியதாக கூறியுள்ளது.