இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் எழுச்சியை அமெரிக்கா ஆதரிக்கும் !!

  • Tamil Defense
  • February 13, 2022
  • Comments Off on இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் எழுச்சியை அமெரிக்கா ஆதரிக்கும் !!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் இந்தோ பசிஃபிக் பிராந்தியத்திற்கு வகுத்துள்ள திட்டத்தில் இந்தியாவின் எழுச்சியை ஆதரிக்கும் பகுதி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் எழுச்சியை ஆதரிப்பதன் மூலமாக சீனாவை எதிர்கொள்ளவும் திட்டமிடப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

அந்த திட்ட அறிக்கையில் தெற்காசியாவில் முதன்மை நாடாகவும் ஒரே எண்ண ஓட்டம் கொண்ட கூட்டாளியாகவும் தென்கிழக்கு ஆசியாவுடன் தொடர்புடைய நாடாகவும் அமெரிக்கா பார்ப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்திய எல்லையில் சீன படைகுவிப்பு தீவிரமாக உள்ளதாகவும், இந்தியா உடன் பாதுகாப்பு ரீதியான உறவுகளையும் மேம்படுத்த அமெரிக்கா விரும்புவதாகவும் கூறப்படுகிறது.