இந்தியா மீது முன்னர் படையெடுத்த ஆஃப்கன் மன்னரின் நினைவாக புதிய படையை உருவாக்கிய தாலிபான்கள் !!

ஆஃப்கானிஸ்தானை சேரந்த அஹமது ஷா அப்தாலி என்பவன் முன்னால் இந்தியா மீது 1761ல் படையெடுத்தான் அப்போது இன்றைய ஹரியானா மாநிலத்தின் பானிபட் நகரில் மராத்திய படைகளுடன் நடைபெற்ற போரில்,

அஹமது ஷா அப்தாலி தலைமையிலான ஆஃப்கானிய படைகள் வெற்றி பெற்ற நிலையில் சுமார் 70,000 பேர் வரை உயிரிழந்தனர் மேலும் பல ஆயிரம் பேர் சிறைபிடிக்கப்பட்டனர்.

தற்போது தாலிபான்கள் இந்த போரின் வெற்றியை கொண்டாடும் விதமாகவும் இந்தியாவை கடுப்பேற்றும் விதமாகவும் “பானிபட்” என்ற பெயரிலான படையணி ஒன்றை உருவாக்கி அமெரிக்க ஆயுதங்களை கொடுத்துள்ளனர்.

இதற்கான விழா ஆஃப்கானிஸ்தான் நாட்டின் நங்கர்ஹார் மாகாணத்தின் தலைநகர் ஜலாலாபாத் நகரில் நடைபெற்றது, இந்த படையணி பாகிஸ்தான் எல்லையோரம் நிலைநிறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.