தரையிலும் வானிலும் இயங்கும் அதிநவீன ஐரோப்பிய ட்ரோன் !!

ஐந்து ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த ஏழு நிறுவனங்கள் அடங்கிய குழுமம் ஒன்று தரையிலும் வானிலும் இயங்கும் திறன் கொண்ட ட்ரோன் ஒன்றை தயாரித்துள்ளனர்.

ஹூவ்வர் என பெயரிடப்பட்டுள்ள இந்த ட்ரோனானது ஒரு ஆளில்லா விமானம் மற்றும் அனைத்து நிலப்பரப்புகளிலும் இயங்கும் ரோபோட்டின் கலவை என கூறப்படுகிறது.

போலந்தின் CERVI ROBOTICS/ DRONEHUB, RECTANGLE ஃபின்லாந்தின் LUT UNIVERSITY ஸ்பெயினுடைய NTT DATA,செக் குடியரசின் GINA Software, ஆஸ்திரியாவின் BLADESCAPE மற்றும் BRIMATECH SERVICES ஆகியவை இதை கூட்டாக தயாரித்துள்ளன.

இதனால் தரையிலும் வானிலும் இயங்க முடிவதால் கண்காணிப்பு, ரோந்து, தேடுதல் மற்றும் மீட்பு ஆகிய பணிகளில் திறம்பட பயன்படுத்தி கொள்ள முடியும் என கூறப்படுகிறது.