இந்தியாவின் புதிய செயற்கைகோள் தயாரிப்பில் பங்கு வகித்த அதானி குழுமம் !!

கடந்த திங்கட்கிழமையன்று இந்தியா விண்ணில் ஏவி நிலைநிறுத்திய RISAT-1A எனப்படும் செயற்கைகோள் இந்தியாவின் தனியார் துறைக்கு மிகப்பெரிய உந்ததுதலை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு காரணம் ALPHA DESIGN TECHNOLOGIES LIMITED -ADTL எனப்படும் பெங்களூரை சேர்ந்த நிறுவனம் செயற்கை கோள் பாகங்களை ஒன்றினைத்து சோதனை வரை செய்ததாகும்.

அதானி குழுமத்தின் பின்துணை கொண்ட இந்த ADTL நிறுவனம் கடந்த 2018ஆம் ஆண்டில் இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பான இஸ்ரோவுடன் விண்கலன் ஒருங்கிணைப்பு மற்றும் ஆய்வு மையத்தில் செயல்பட ஒப்பந்தம் செய்து கொண்டது.

இந்த மையத்தில் செயற்கைகோள் தயாரிப்பு மற்றும் சோதனை ஆகியவற்றை செய்து கொள்ள முடியும் அந்த வகையில் தான் இந்த RISAT-1A செயற்கைகோளும் உருவாகி உள்ளது கூடுதல் தகவலாகும்.