கடந்த நிதியாண்டில் சுமார் 4 லட்சத்து 78 ஆயிரம் கோடி ரூபாய் பாதுகாப்பு துறைக்காக ஒதுக்கப்பட்ட நிலையில் 2022-2023 நிதியாண்டில் இது சுமார் 9.83 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
அதாவது இந்த முறை ஒதுக்கப்பட்ட தொகை சுமார் 5 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும் இதில் ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் வாங்குவது மற்றும் இதர முதன்மை செலவுக்கான தொகை 1 லட்சத்து 58 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.
இதுவும் கடந்த ஆண்டில் ஒதுக்கப்பட்ட 1 லட்சத்து 38 ஆயிரம் கோடி ரூபாயில் இருந்து சுமார் 10 சதவிகித உயர்வாகும், ஆயுதம் மட்டும் வாங்குவதற்கு தரைப்படைக்கு 32,015 கோடியும், விமானப்படைக்கு 55,586 கோடியும், கடற்படைக்கு 47,590 கோடியும் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது.
இதில் தரைப்படைக்கு ஒதுக்கப்பட்ட தொகை கடந்த ஆண்டை விடவும் 12.26% குறைவாகும், விமானப்படைக்கு ஒதுக்கப்பட்ட தொகை 4.45% உயர்வாகும் கடற்படைக்கு ஒதுக்கப்பட்ட தொகை சுமார் 43.11% எனும் அளவில் பிரமாண்ட உயர்வாகும்.
இதற்கு காரணம் இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்களை சமாளிக்க இந்திய கடற்மடையை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை அரசு உணர்ந்திருப்பது தான் ஆகவே இந்த வருடம் மிகப்பெரிய கொள்முதலை இந்திய கடற்படையிடம் இருந்து எதிர்பார்க்கலாம்.
இவற்றை தவிர 2 லட்சத்து 33 ஆயிரம் கோடி ரூபாய் படையினரின் ஊதியம் மேலும் தளவாடங்கள் மற்றும் தளங்களின் பராமரிப்பு ஆகியவற்றிற்காக ஒதுக்கீடு செய்யப்ட்டுள்ளது.
அதை போல 1 லட்சத்து 19 ஆயிரத்து 696 கோடி ரூபாய் முன்னாள் படை வீரர்களின் ஓய்வூதியத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது கடைசியாக 20,100 கோடி ரூபாய் பாதுகாப்பு துறையில் பணியாற்றும் சிவிலியன் பிணியாளர்களின் ஊதியத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் மேலே பார்த்த முதன்மை செலவுகளுக்கான தொகையில் சுமார் 68 சதவிகிதம் இந்திய தயாரிப்பு தளவாடங்கள் வாங்குவதற்கென பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது என்பதாகும்.