மத்திய அரசு நாடாளுமன்றத்தின் மக்களவையில் கடந்த 60 ஆண்டுகளாக சீனா லடாக் மாநிலத்தின் 38,000 சதுர கிலோமீட்டர் பகுதியை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த தகவலை வெளியுறவு துறை இணை அமைச்சர் வி மூரளிதரன் தெரிவித்தார் மேலும் பாகிஸ்தான் சீனாவுக்கு 5,180 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட ஷாக்ஸ்கம் பள்ளதாக்கு பகுதியை கடந்த 1963ஆம் ஆண்டு சீனாவுக்கு தாரை வார்த்ததாகவும், இது சீன-பாகிஸ்தான் எல்லை ஒப்பந்தம் மூலமாக நடைபெற்றது எனவும் கூறினார்.
இன்றைய நாள் வரை இந்திய அரசு மேற்குறிப்பிட்ட சீன பாகிஸ்தான் எல்லை ஒப்பந்தத்தை அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.