3 பாகிஸ்தானியர்களை சுட்டு வீழ்த்திய எல்லை பாதுகாப்பு படையினர் !!

  • Tamil Defense
  • February 7, 2022
  • Comments Off on 3 பாகிஸ்தானியர்களை சுட்டு வீழ்த்திய எல்லை பாதுகாப்பு படையினர் !!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா பகுதியில் எல்லையை அத்துமீறி கடக்க முயன்ற மூன்று பாகிஸ்தானியர்களை நமது எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.

பின்னர் மூவரின் உடல்களையும் எல்லை பாதுகாப்பு படையினர் சோதனை செய்த போது மிகப்பெரிய அளவில் போதை பொருட்கள் இருப்பது தெரிய வந்துள்ளது, இப்படி மொத்தமாக 36 பொட்டலங்களை கண்டறிந்து உள்ளனர்.

தற்போது நமது எல்லை பாதுகாப்பு படையினர் பாகிஸ்தான் தரப்பு படைகளிடம் இது பற்றிய தகவல் தெரிவித்து உள்ளனர் விரைவில் மூவரின் உடல்களும் ஒப்படைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னர் இதே சம்பா செக்டாரில் கடந்த ஜனவரி 3ஆம் தேதி எல்லை பாதுகாப்பு படையினர் இப்படி எல்லையை அத்துமீறி கடக்க முயன்ற ஒருவரை சுட்டு வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.