Day: February 23, 2022

ஃபிலிப்பைன்ஸ் நாட்டிற்கு இரவில் பாரக்கும் கருவிகளை ஏற்றுமதி செய்யும் இந்தியா !!

February 23, 2022

ஃபிலிப்பைன்ஸ் நாட்டு படைகள் அந்நாட்டின் மராவி பகுதியில் ஐ.எஸ் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளை வேரோடு அழிக்க நடத்திய நீண்ட போராட்டத்தில் பல பாடங்களை கற்று கொண்டன. அதன் ஒரு பகுதியாக இரவில் பாரக்கும் கருவிகளுக்கான தேவையை உணர்ந்த ராணுவம் அவற்றை வாங்க ஒரு சர்வதேச அளவிலான டென்டரை கடந்த ஆண்டு நவம்பர் வெளியிட்டது. இந்தியாவின் MKU, ஃபிலிப்பைன் கெம்ஸ்டீல் மற்றும் பான்பிஸ்கோ டெக்னாலஜிஸ் ஆகிய நிறுவனங்கள் கலந்து கொண்ட இந்த டென்டரில் இந்தியாவின் MKU வெற்றி பெற்று […]

Read More

விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட இந்தியாவின் “கண்” !!

February 23, 2022

இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் தனது PSLV C52 ரக ராக்கெட் மூலமாக EOS-4 எனும் பூமி கண்காணிப்பு செயற்கைகோளை ஏவியது. இந்த EOS-04 பூமி கண்காணிப்பு செயற்கை கோள் நாட்டின் மிகப்பெரிய சொத்தாகும் அதாவது விண்வெளியில் இந்தியாவின் கண்ணாக செயல்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 10 வருட ஆயுட்காலம் கொண்ட இந்த செயற்கை கோளை பயன்படுத்தி விவசாயம், வனங்கள், தோட்டங்கள், நீராதாரங்கள், பூமியின் தன்மைகளை அறிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்குறிப்பிட்ட செயற்கைகோளுடன் INSPIREsat-1 மற்றும் […]

Read More

சிக்கல்களில் சிக்கிய இந்திய நீர்மூழ்கிகள் திட்டம் !!

February 23, 2022

இந்தியா AIP திறன் கொண்ட ஆறு டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கிகளை. தொழில்நுட்ப பரிமாற்ற அடிப்படையில் இந்தியாவிலேயே கட்டமைக்கும் ப்ராஜெக்ட்-75ஐ எனும் திட்டத்தில் கட்டமைக்க விரும்புகிறது. இந்த 43,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் கடந்த 1999ஆம் ஆண்டு இந்திய அரசால் ஆரம்பிக்கப்பட்ட 30 ஆண்டு கால நீர்மூழ்கி கட்டமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாகும். தற்போது இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கடும் கெடுபிடி நிபந்தனைகளால் ரஷ்யா வெளியேறிய நிலையில் மற்ற நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. இந்த கடுமையான கெடுபிடி […]

Read More

ஆகாஷ், அஸ்திரா ஏவுகணைகளின் ஒப்பந்தங்களுக்கு காத்திருக்கும் பாரத் டைனமிக்ஸ் !!

February 23, 2022

பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தின் தலைமை மேலாண் இயக்குனர் சித்தார்த் மிஷ்ரா ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் ஆகாஷ் மற்றும் அஸ்திரா ஆகிய ஏவுகணைகளின் விற்பனைக்கு காத்திருப்பதாகவும், இந்த இரண்டு ஏவுகணைகளுமே தயாரிப்பு நிலையை எட்டியுள்ள நிலையில் அவற்றிற்கான மிகப்பெரிய ஒப்பந்தங்களை இந்திய படைகளிடம் இருந்து எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார். இந்த ஏவுகணைகள் மீது வியட்நாம், ஃபிலிப்பைன்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா போன்ற பல்வேறு நாடுகள் ஆர்வம் காட்டி உள்ளதும் குறிப்பிட தகுந்த விஷயமாகும்.

Read More

முதல் முறையாக இங்கிலாந்து செல்லும் தேஜாஸ் விமானங்கள் !!

February 23, 2022

முதல்முறையாக இங்கிலாந்தில் நடைபெற உள்ள பன்னாட்டு விமானப்படை போர் பயிற்சியில் கலந்து கொள்ள இந்தியா சார்பில் தேஜாஸ் விமானங்கள் செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வழக்கமாக இத்தகைய போர் பயிற்சிகளுக்கு இந்திய விமானப்படையின் சுகோய்30 அல்லது வேறு ஏதும் போர் விமானங்கள் தான் அனுப்பி வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தில் நடைபெற உள்ள கோப்ரா வாரியர் பயிற்சியில் பிரிட்டிஷ் டைஃபூன், எஃப்-35, சுவீடனின் க்ரைப்பன், சவுதியின் எஃப்-15 மற்றும் பல்கேரியாவின் எஃப்-16 ஆகியவை கலந்து கொள்ள உள்ளன. […]

Read More

இந்திய பேராசிரியர் கண்டுபிடித்த புதிய லேசர் கருவி !!

February 23, 2022

மும்பை ஐஐடியில் பணியாற்றி வரும் பேராசிரியர் ஒருவர் புதிய அதிநவீன லேசர் கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளார் இதனை கொண்டு பல்வேறு வகையான கருவிகளை சரி செய்ய முடியும் என கூறப்படுகிறது. இந்த புதிய கண்டுபிடிப்பு மூலமாக புணரமைப்பு மற்றும் சரிபார்ப்பு தொழில்துறை புதிய உச்சங்களை தொடும் என இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. லேசர் கட்டிங், வெல்டிங், தெர்மல் ஸ்ப்ரேயிங் போன்ற பல்வேறு வகையான பணிகளுக்கு திறன் வாய்ந்த பணியாளர்கள் அவசியம் ஆனாலும் […]

Read More

உக்ரைன் உடனான அமைதி ஒப்பந்தம் இனி செல்லாது புடின் !!

February 23, 2022

ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் உக்ரைன் உடன் ரஷ்யா செய்து கொண்ட அமைதி ஒப்பந்தம் இனி செல்லாது என அறிவித்துள்ளார். உக்ரைனுடயை டோனெட்ஸ்க் மற்றும் லூஹான்ஸ்க் ஆகிய பகுதிகளை சுதந்திர நாடுகளாக அங்கரித்ததையடுத்து இனி மின்ஸ்க் ஒப்பந்தம் செல்லாது என அவர் கூறியுள்ளார். ரஷ்யா உக்ரைனை மிகவும் கடுமையாக சாடி விமர்சனம் செய்து குற்றம்சாட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More

கிழக்கு உக்ரைனுக்கு படைகளை அனுப்ப புடினுக்கு ரஷ்ய பாராளுமன்றம் அனுமதி !!

February 23, 2022

ரஷ்ய பாராளுமன்றத்தின் மேல் சபை நேற்று ரஷ்ய அதிபருக்கு கிழக்கு உக்ரைனில் படைகளை குவிக்க அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து அமைதிகாக்கும் பணிகளுக்காக டோனெட்ஸ்க் மற்றும் லூஹான்ஸ்க் ஆகிய பகுதிகளுக்கு ரஷ்ய படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடினுடைய கோரிக்கையை ஏற்று மேல்சபை உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக ஆதரவு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More