இந்தியா உடனான எல்லையோரம் சீனா தனது விமானங்களை அதிக உயரத்தில் பறக்க வைப்பதற்காக அதிக நீளம் கொண்ட விமான ஒடுதளங்களை திபெத் மற்றும் ஸின்ஜியாங் பகுதிகளில் அமைத்து வருகிறது. மேலும் அதிக அளவிலான போக்குவரத்து மற்றும் எரிபொருள் டேங்கர் ரக விமானங்களை படையில் இணைத்து படை நகர்த்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. முன்னர் சீன விமானப்படை விமானங்கள் முழு அளவிலான எரிபொருள் மற்றும் ஆயுத சுமையுடன் பறக்க இயலாத நிலை இருந்தது. இந்த நிலையில் […]
Read Moreஃபிலிப்பைன்ஸ் தரைப்படை விரைவில் சுமார் 7,793 இந்திய தயாரிப்பு தலைகவங்களை இந்த ஆண்டின் இரண்டாம் காலிறுதியில் பெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டில் ஃபிலிப்பைன்ஸ் இரண்டு ஒப்பந்தங்களை இதற்காக இந்திய நிறுவனமான MKU LIMITED உடன் செய்து கொண்டது. ஆக நிபந்தனைகளின்படி MKU நிறுவனமானது தனது காவ்ரோ வரிசை தலைகவசங்களை ஃபிலிப்பைன்ஸ் தரைப்படையின் தேவைக்கேற்றாற் போல தகவமைத்து வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. MKU LIMITED நிறுவனமானது கடந்த 2020ஆம் ஆண்டு முதலே ஃபிலிப்பைன்ஸ் நாட்டு […]
Read Moreஉக்ரைன் நாட்டு அதிபர் வோலோடிமீர் ஸெலன்ஸ்கி உக்ரைனில் நட்பு நாடுகளுடைய படைகள் குவிக்கப்படுவதற்கு அவசியம் ஏதும் இல்லை என கூறியுள்ளார். அப்படி அந்நிய நாடுகளின் படைகள் குவிக்கப்பட்டால் நிலைமை மேலும் மோசமாகி உலக அமைதிக்கே கேடு விளைவித்து விடும் எனவும் கூறியுள்ளார். மேலும் ரஷ்யாவிற்கு நாங்களே அவர்களுக்கு தேவையான காரணிகளை ஏற்படுத்தி கொடுக்க விரும்பவில்லை எனவும் ஆனால் உதவிகள் தொடர்ந்து தேவை எனவும் கூறியுள்ளார்.
Read Moreஉக்ரைன் விவகாரத்தில் ரஷ்ய மற்றும் அமெரிக்கா இடையில் மோதல் நிலவி வரும் நிலையில் இந்தியா ஏதேனும் ஒரு நிலைபாட்டை எடுக்க கடும் அழுத்தம் தரப்படுகிறது. இதுவரை இந்தியா இந்த விவகாரத்தில் எந்த தரப்புக்கும் தனது ஆதரவையோ அல்லது எதிர்ப்பையோ தெரிவிக்காமல் நடுநிலையாக இருந்து வருகிறது. இந்த நிலைபாடு ரஷ்யா மீதான இந்தியாவின் கரிசனையாக பார்க்கப்படும் அதே நேரத்தில் ஒரு நாட்டின் எல்லைகளை ராணுவ வலிமை கொண்டு மாற்றியமைப்பதையும் இந்தியா எதிர்ப்பது குறிப்பிடத்தக்கது.
Read Moreதலைநகர் தில்லியில் நேற்று இரண்டு வெவ்வேறு இடங்களில் மர்ம பைகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாக காவல்துறைக்கு தகவல் வந்த நிலையில் சீமாபுரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது அதனை தேசிய பாதுகாப்பு படையினர் கைபற்றி சென்று பத்திரமாக செயலிழக்க செய்தனர். கடந்த மாதம் காஸிபூர் பகுதியில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு தேசிய பாதுகாப்பு படையினரால் செயலிழக்க வைக்கப்பட்டதும் இரண்டு வெடிகுண்டுகளுமே ஒரு வகையான வெடிமருந்துகளால் செய்யப்பட்டவை என்பதும் இதன் தீவிரத்தன்மையை உணர்த்துகின்றன. மேலும் இது தொடர்பாக […]
Read Moreஇந்திய கடற்படையில் சமீபத்தில் இணைந்த புத்தம் புதிய நாசகாரி போர் கப்பல் ஐ.என்.எஸ். விசாகப்பட்டினம் தற்போது கடல் சோதனைகளில் உள்ளது. அந்த வகையில் நேற்று விசாகப்பட்டினத்தில் இருந்து சற்றே தொலைவில் ஆழ்கடல் பகுதியில் இந்த கப்பல் பிரம்மாஸ் ஏவுகணை ஒன்றை ஏவி வெற்றிகரமாக சோதனை செய்தது. வருகிற 21ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ள ஜனாதிபதிக்கான கடற்படை அணிவகுப்பில் இந்த கப்பல் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கதாகும்.
Read Moreஐந்து ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த ஏழு நிறுவனங்கள் அடங்கிய குழுமம் ஒன்று தரையிலும் வானிலும் இயங்கும் திறன் கொண்ட ட்ரோன் ஒன்றை தயாரித்துள்ளனர். ஹூவ்வர் என பெயரிடப்பட்டுள்ள இந்த ட்ரோனானது ஒரு ஆளில்லா விமானம் மற்றும் அனைத்து நிலப்பரப்புகளிலும் இயங்கும் ரோபோட்டின் கலவை என கூறப்படுகிறது. போலந்தின் CERVI ROBOTICS/ DRONEHUB, RECTANGLE ஃபின்லாந்தின் LUT UNIVERSITY ஸ்பெயினுடைய NTT DATA,செக் குடியரசின் GINA Software, ஆஸ்திரியாவின் BLADESCAPE மற்றும் BRIMATECH SERVICES ஆகியவை இதை கூட்டாக […]
Read More