Day: February 18, 2022

விரைவில் அறிமுகுமாகும் மற்றொரு இந்திய இஸ்ரேல் ஆயுதம் !

February 18, 2022

இந்த ஆண்டு நடைபெற உள்ள பாதுகாப்பு கண்காட்சியில் AVision எனப்படும் கூட்டு தயாரிப்பு நிறுவனம் பங்கேற்க உள்ளது. மேற்குறிப்பிட்ட நிறுவனமானது இஸ்ரேலின் UVision Air மற்றும் இந்தியாவின் Aditya Precitech ஆகிய நிறுவனங்களால் கூட்டாக நிறுவப்பட்டதாகும். இந்த நிறுவனம் தனது PALM ரக மிதவை குண்டுகளை அறிமுகப்படுத்த உள்ளது இவை ஏற்கனவே பல்வேறு சண்டைகளில் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டவை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றை கொண்டு இலகுரக நிலையான அல்லது நகரும் இலக்குகளை தாக்கி அழிக்கவும்,பாதுகாப்பு நிலைகள், கவச […]

Read More

காஷ்மீரில் காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் நிரம்பிய கிராமத்தை தத்தெடுத்த இந்திய ராணுவம் !!

February 18, 2022

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தோடா மாவட்டத்தில் உள்ள பதேர்வாஹ் கிராமத்தில் இருந்து 105 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ததாகி கிராமத்தை இந்திய தரைப்படை தத்தெடுத்து உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 105 குடும்பங்கள் வசித்து வருகின்றன இந்த நிலையில் அவற்றில் சுமார் 55 குடும்பங்களில் குறைந்தபட்சம் ஒருவருக்காவது பேசவோ அல்லது காது கேளாத நிலையோ உள்ளது. இப்படி சுமார் 78 பேர் உள்ளனர் அவர்களில் 41 பெண்கள் மற்றும் 15 வயதுக்கு கீழே குழந்தைகள் 30 பேரும் […]

Read More

இந்தியா மீது முன்னர் படையெடுத்த ஆஃப்கன் மன்னரின் நினைவாக புதிய படையை உருவாக்கிய தாலிபான்கள் !!

February 18, 2022

ஆஃப்கானிஸ்தானை சேரந்த அஹமது ஷா அப்தாலி என்பவன் முன்னால் இந்தியா மீது 1761ல் படையெடுத்தான் அப்போது இன்றைய ஹரியானா மாநிலத்தின் பானிபட் நகரில் மராத்திய படைகளுடன் நடைபெற்ற போரில், அஹமது ஷா அப்தாலி தலைமையிலான ஆஃப்கானிய படைகள் வெற்றி பெற்ற நிலையில் சுமார் 70,000 பேர் வரை உயிரிழந்தனர் மேலும் பல ஆயிரம் பேர் சிறைபிடிக்கப்பட்டனர். தற்போது தாலிபான்கள் இந்த போரின் வெற்றியை கொண்டாடும் விதமாகவும் இந்தியாவை கடுப்பேற்றும் விதமாகவும் “பானிபட்” என்ற பெயரிலான படையணி ஒன்றை […]

Read More

ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தால் இந்தியா ஆதரவு தரும் அமெரிக்கா நம்பிக்கை !!

February 18, 2022

உலகளாவிய சட்ட நெறிமுறைகளை மிகவும் மதிக்கும் நாடாக திகழும் இந்தியா ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தால் இந்தியா அமெரிக்கா பக்கம் நின்று ஆதரவு தரும் என அமெரிக்கா நம்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் நெட் ப்ரைஸ் சமீபத்தில் பேசும்போது ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற க்வாட் வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பின் போது உக்ரைன் ரஷ்ய விவகாரமும் விவாதிக்கபட்டதாக தெரிவித்தார். மேலும் இந்த விவகாரத்தில் ராஜதந்திர யுக்திகள் மற்றும் நடைமுறைகளை கையாண்டு இரு […]

Read More

ரஷ்ய தீர்மானத்தை பற்றி விவாதிக்க ஐநா பாதுகாப்பு சபையில் முறையிட்ட உக்ரைன் !!

February 18, 2022

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலிடம் உக்ரைன் தனது நாட்டின் டான்பாஸ் பகுதியில் உள்ள டோனெட்ஸ்க் மற்றும் லூஹான்ஸ்க் பகுதிகளை, தனி நாடுகளாக அங்கிகரிக்க கோரி ரஷ்யா நாடாளுமன்றமான டூமாவில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அந்த தீர்மானம் ரஷ்ய அதிபரான விளாடிமிர் புடினுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டு இந்த விவகாரம் பற்றி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை விவாதம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்ததையடுத்து நேற்று இதுபற்றிய விவாதம் நடைபெற்றுள்ளது. மேற்குறிப்பிட்ட நிகழ்வானது மின்ஸ்க் ஒப்பந்தங்கள் […]

Read More

நாட்டின் முதலாவது கடல்சார் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்ற முன்னாள் கடற்படை துணை தளபதி !!

February 18, 2022

இந்தியாவின் முதலாவது கடல்சார் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளராக இந்திய கடற்படையின் துணை தளபதியாக பணியாற்றி ஒய்வு பெற்ற வைஸ் அட்மிரல் அஷோக் குமார் பொறுப்பேற்றுள்ளார். அஜித் தோவல் தலைமையிலான தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலகத்தில் இருந்து தேசிய கடல்சார் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளராக அவர் பணியாற்ற உள்ளார் என்பது கூடுதல் தகவல் ஆகும். திருப்பூர் அமராவதி நகர் ராணுவ பள்ளியில் பயின்ற இவர் தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயின்று 1982 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1ஆம் தேதி இந்திய […]

Read More

சிங்கப்பூரில் பலரை ஈர்த்த இந்தியாவின் தேஜாஸ் மற்றும் இஸ்ரேலிய ட்ரோன் !!

February 18, 2022

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்தியாவின் தேஜாஸ் தனது அசத்தல் வித்தைகளால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்னர் துபாயில் பங்கு பெற்ற கையோடு தற்போது தென் கிழக்கு ஆசியாவில் தேஜாஸை பிரபலப்படுத்தும் நோக்கிலேயே சிங்கப்பூர் கண்காட்சியில் தனது திறன்களை காட்டி உள்ளது. மலேசிய விமானப்படைக்கான 18 இலகுரக போர் விமான ஒப்பந்தத்திற்கான போட்டியில் இந்தியாவின் தேஜாஸ் மிகவும் வலுவான நிலையில் உள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. அதை போல இஸ்ரேலின் எல்பிட் சிஸ்டம்ஸ் நிறுவனமானது […]

Read More

எந்த நாட்டிடமும் இல்லாத புதிய ஏவுகணை சிலாகித்த சீன ஊடகங்கள் !!

February 18, 2022

சீனாவின் புதிய வான் பாதுகாப்பு ஏவுகணையான QW-12 ஹெலிகாப்டர்கள் விமானங்கள் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகளை கூட வெற்றிகரமாக சோதனைகளின் போது இடையிறத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீன அரசு ஊடகமான க்ளோபல் டைம்ஸ் இதுபற்றி வெளியிட்டுள்ள செய்தி கட்டுரையில் உலகத்தரம் வாய்ந்த இந்த ஏவுகணையை போல் உலகில் வேறேந்த நாட்டிலும் ஏவுகணை இல்லை என சிலாகித்து எழுதியுள்ளது. இந்த வகை ஏவுகணைகளை வாகனங்களில் பொருத்தி களத்தில் கொண்டு சென்ற மிகவும் சுலபமாக பயன்படுத்தி கொள்ள முடியும் எனவும் சீனாவில் […]

Read More

சீன அச்சுறுத்தல் ;இந்தியாவை எச்சரித்த அமெரிக்கா இணைந்து பணியாற்ற விருப்பம் !!

February 18, 2022

க்வாட் வெளியுறவு அமைச்சர்களின் மாநாட்டில் அமெரிக்கா இந்தோ பசிஃபிக் பிராந்தியத்திற்கான மூலோபாய அறிக்கை ஒன்றை வெளியிட்டது. பின்னர் இந்தியா உடனான எல்லையோரம் சீனாவின் நடவடிக்கைகள் குறித்து கவலை தெரிவித்து எச்சரித்த அமெரிக்கா இந்தியா உடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளது. மருத்துவம், விண்வெளி, சைபர் ஸ்பேஸ், பொருளாதாரம், தொழில்நுட்பம் என பல்வேறு துறைகளில் இணைந்து பணியாற்றுவதன் மூலமாக இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தின் சுதந்திரத்தை பாதுகாக்க முடியும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Read More

அஜித் தோவல் வீட்டில் அத்துமீறி நழைந்த நபர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் !!

February 18, 2022

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் வீட்டில் அத்துமீறி நுழைய முயன்ற நபரை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தில்லி காவல்துறையினர் கைது செய்தனர். 43 வயதான அந்த நபர் தன் உடலில் ஒரு சிப் இருப்பதாகவும் தன்னை யாரோ இயக்குவதாகவும் அதனால் தான் அத்துமீறி நுழைய முயன்றதாகவும் கூறியதை அடுத்து ஸ்கேன் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அவரது உடலில் அப்படி எந்தவித சிப்பும் காணப்படாத நிலையில் தீவிரமாக விசாரித்த போது இவர் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட […]

Read More