160 கருட் சிறப்பு படை கமாண்டோ வீரர்களின் பயிற்சி நிறைவு !!

குஜராத் மாநிலம் சாந்திநகரில் உள்ள விமானப்படை தளத்தில் கருட் கமாண்டோ ரெஜிமென்ட்டல் பயிற்சி மையம் அமைந்துள்ளது, இங்கு கரூட் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

நேற்று முன்தினம் இந்த மையத்தில் பயிற்சியை நிறைவு செய்த 160 கருட் சிறப்பு படை கமாண்டோக்களின் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது அதில் ஏர் மார்ஷல் கார்கரே தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.

பயிற்சி நிறைவு செய்த வீரர்களுக்கு கருட் கமாண்டோ பேட்ஜ், மெரூன் தொப்பி, சிறப்பு படை பட்டை ஆகியவற்றை வழங்கி சிறப்பாக பயிற்சி நிறைவு செய்த வீரர்களுக்கு கேடயங்களையும் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

இதன் பின்னர் கருட் வீரர்கள் ஆயுதமில்லா சண்டை, துப்பாக்கி சுடுதல், வெடிகுண்டு தாக்குதல், பணய கைதி மீட்பு , கயிறு மூலம் இறங்குவது போன்ற திறன்களை நிகழ்த்தி காட்டினர் என்பது கூடுதல் சிறப்பு ஆகும்.