100 பாகிஸ்தான் வீரர்களை கொன்று குவித்த பலூச் விடுதலை படையினர் !!

நேற்று பாகிஸ்தான் நாட்டின் பலூச்சிஸ்தான் மாகாணத்தில் உள்ள பன்ஜ்கூர் மற்றும் நூஷ்கி ராணுவ முகாம்கள் மீது பலூச் விடுதலை படையினர் தாக்குதல் நடத்தி உள்ளதாகவும்

இரண்டு முகாம்களும் மிக கடுமையான சேதத்தை சந்தித்த நிலையில் 100 பாகிஸ்தான் ராணுவ வீரர்களை கொன்றிருப்பதாகவும் பலூச் விடுதலை படையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

பாகிஸ்தான் ஊடகங்கள் இதுபற்றி செய்தி ஒளிபரப்ப அனுமதிக்கப்படாத நிலையில் பாகிஸ்தான் ராணுவம் முகாம்கள் மீதான தாக்குதல் வெற்றிகரமாக முறியடிக்க பட்டதாக தகவல் வெளியிட்டுள்ளது.