Day: February 7, 2022

அணு ஆயுத தாக்குதல் திறன் கொண்ட குண்டுவீச்சு விமானங்களை பெலாரஸ் நாட்டிற்கு அனுப்பிய ரஷ்யா !!

February 7, 2022

ரஷ்யா சமீபத்தில் ஒரு ஜோடி தொலைதூர சூப்பர்சானிக் குண்டுவீச்சு போர் விமானங்களை நேட்டோ நாடுகளுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் மிக நெருங்கிய நட்பு நாடான பெலாரஸ் நாட்டின் வான் பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இரண்டு Tu22M3 ரக சூப்பர்சானிக் தொலைதூர குண்டுவீச்சு போர் விமானங்களும் பெலாரஸ் நாட்டின் விமானப்படை மற்றும் வான் பாதுகாப்பு படைகளுடன் ஒருங்கிணைந்து பயிற்சிகளை மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ளது. ஏற்கனவே ரஷ்யா சைபீரியாவில் இருந்து ஏராளமான தரைப்படை படையணிகளை […]

Read More

3 பாகிஸ்தானியர்களை சுட்டு வீழ்த்திய எல்லை பாதுகாப்பு படையினர் !!

February 7, 2022

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா பகுதியில் எல்லையை அத்துமீறி கடக்க முயன்ற மூன்று பாகிஸ்தானியர்களை நமது எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். பின்னர் மூவரின் உடல்களையும் எல்லை பாதுகாப்பு படையினர் சோதனை செய்த போது மிகப்பெரிய அளவில் போதை பொருட்கள் இருப்பது தெரிய வந்துள்ளது, இப்படி மொத்தமாக 36 பொட்டலங்களை கண்டறிந்து உள்ளனர். தற்போது நமது எல்லை பாதுகாப்பு படையினர் பாகிஸ்தான் தரப்பு படைகளிடம் இது பற்றிய தகவல் தெரிவித்து உள்ளனர் விரைவில் மூவரின் உடல்களும் […]

Read More

ஆழ்கடல் மீட்பு பணிகளில் பயிற்றுவிக்க DSRV சிமுலேட்டர்களை வாங்க விரும்பும் கடற்படை !!

February 7, 2022

இந்தியா கடந்த சில வருடங்களாகவே தனது நீர்மூழ்கிகளின் எண்ணிக்கை மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகளை அதிகரிக்க மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நீர்மூழ்கி நடவடிக்கைகளில் மிகவும் முக்கியமான ஆழ்கடல் மீட்பு திறன்களையும் இந்திய கடற்படை மேம்படுத்தி நிபுணத்துவம் பெற விரும்புகிறது. அந்த வகையில் ஏற்கனவே இந்தியா மிக சொற்ப நாடுகளே இயக்கி வரும் ஆழ்கடல் மீட்பு வாகனங்களில் இரண்டை இங்கிலாந்து நிறுவனம் ஒன்றிடம் இருந்து வாங்கியுள்ளது. தற்போது அவற்றின் ஆழ்கடல் நடவடிக்கைகளை, […]

Read More

சீனாவின் ஹைப்பர்சானிக் ஏவுகணைகளை தடுக்கும் ஒரே அமெரிக்க ஆயுதம் !!

February 7, 2022

சமீபத்தில் அமெரிக்க ஏவுகணை பாதுகாப்பு முகமையின் தலைவரான அமெரிக்க கடற்படையின் மூத்த அதிகாரியான வைஸ் அட்மிரல் ஜாண் ஹில் ஒரு பரப்பரப்பான கருத்தை வெளியிட்டுள்ளார். அதாவது அதிகமாக மேனுவர் செய்யும் திளன் கொண்ட ஹைப்பர்சானிக் ஏவுகணைகளை தடுத்து நிறுத்த கூடிய அல்லது சுட்டு வீழ்த்த கூடிய திறன் கொண்ட ஒரே ஆயுதம் அமெரிக்காவின் SM-6 ஏவுகணை என கூறியுள்ளார். கடந்த ஆண்டு மேற்குறிப்பிட்ட அதிகமாக மேனுவர் செய்யும் திறன் கொண்ட ஹைப்பர்சானிக் ஏவுகணைகளை தடுக்கும் திறன் கொண்ட […]

Read More

கோவை தொழில் முனைவோருக்கு 140 கோடி மதிப்பிலான பாதுகாப்பு துறை ஒப்பந்தம் !!

February 7, 2022

கோடிசியா எனப்படும் கோவை மாவட்ட சிறு தொழிற்சாலைகள் கூட்டமைப்பின் ஒரு பிரிவான கோடிசியா CDIIC அமைப்பிற்கு இந்திய பாதுகாப்பு துறையின் ஒப்பந்தம் கிடைத்துள்ளது. அதாவது சுமார் 143 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தின் மூலமாக 124 வெவ்வேறு பொருட்களை இறக்குமதி செய்யாமல் இந்தியாவிலேயே தயாரிக்க பாதுகாப்பு அமைச்சகம் விரும்புகிறது. ஆகவே நாட்டில் உள்ள சிறு குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளை இதில் ஈடுபடுத்த மத்திய அரசு விரும்பி நடவடிக்கை எடுத்து வருகிறது இதையொட்டி மேற்குறிப்பிட்ட ஒப்பந்தம் […]

Read More