Day: February 6, 2022

38,000 சதுர கிலோமீட்டர் இந்திய பகுதியை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்திருக்கும் சீனா !!

February 6, 2022

மத்திய அரசு நாடாளுமன்றத்தின் மக்களவையில் கடந்த 60 ஆண்டுகளாக சீனா லடாக் மாநிலத்தின் 38,000 சதுர கிலோமீட்டர் பகுதியை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த தகவலை வெளியுறவு துறை இணை அமைச்சர் வி மூரளிதரன் தெரிவித்தார் மேலும் பாகிஸ்தான் சீனாவுக்கு 5,180 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட ஷாக்ஸ்கம் பள்ளதாக்கு பகுதியை கடந்த 1963ஆம் ஆண்டு சீனாவுக்கு தாரை வார்த்ததாகவும், இது சீன-பாகிஸ்தான் எல்லை ஒப்பந்தம் மூலமாக நடைபெற்றது எனவும் கூறினார். இன்றைய நாள் […]

Read More

எல்லையோர மக்களுக்கு ட்ரோன்கள் கண்காணிக்க BSF விழிப்புணர்வு பயிற்சி !!

February 6, 2022

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் உடனான 198 நீளமான எல்லை பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ட்ரோன்களை கண்காணிக்க எல்லை பாதுகாப்பு படையினர் விழிப்புணர்வு முகாம் முலமாக பயிற்சி அளித்து வருகின்றனர். அந்த வகையில் இதுவரை சுமார் 140 விழிப்புணர்வு முகாம்களை எல்லை பாதுகாப்பு படையினர் நடத்தி உள்ளனர், அர்னியா, அக்னூர், ஆர் எஸ் புரா ஆகிய பகுதிகளில் ஆங்காங்கே பதாகைகளும் அமைக்கப்பட்டு உள்ளன. எல்லை பாதுகாப்பு படையின் வீரர்கள் கண்காணிப்பு மற்றும் தொழில்நுட்ப கண்காணிப்புகள் ஒருபுறம் இருக்க […]

Read More

ஹெலிகாப்டர் மூலம் ஏவப்படும் சுதேசி சப்சானிக் கப்பல் எதிர்ப்பு எவுகணை விரைவில் சோதனை !!

February 6, 2022

இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வடிவமைத்து தயாயித்துள்ள குறுந்தூர கப்பல் எதிர்ப்பு ஏவுகணையின் சோதனை இந்த ஆண்டு மத்தியில் நடைபெற உள்ளது. இந்த ஏவுகணை மிகுந்த விலைமதிப்பு கொண்ட மேற்கத்திய ஏவுகணைகளான Naval Strike, Marte ER, Sea Venom ஆகியவற்றிற்கான இந்திய மாற்றாக இருக்கும் என நம்பத்தகுந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹெலிகாப்டர்களில் இருந்து ஏவப்படும் 380 கிலோ எடை கொண்ட இந்த சப்சானிக் ஏவுகணையானது 100 கிலோ வெடிமருந்தை சுமந்து சென்று […]

Read More

80 ஆஃப்கன் ராணுவ பயிற்சி அதிகாரிகளுக்கு பயற்சி வழங்கும் இந்தியா !!

February 6, 2022

இந்தியாவில் முந்தைய ஆஃப்கானிஸ்தான் ஆட்சியாளர்கள் காலத்தின் போது வந்து பல ராணுவ பயிற்சி அதிகாரிகள் பயிற்சி பெற்றனர். இவர்களின் பயிற்சி காலம் நிறைவு பெற்றதையடுத்து சொந்த நாட்டிற்கு தாலிபான்களின் ஆட்சி மற்றும் அடாவடித்தனம் காரணமாக செல்ல முடியாமல் சிக்கி கொண்டனர். இந்த நிலையில் இந்த 80 பயிற்சி அதிகாரிகளை இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார திட்டத்தின் கீழ் 12 மாத ஆங்கில பயிற்சி அளிக்க உள்ளனர் ஆகவே சில காலம் அவர்கள் இங்கு தங்க முடியும் என்பது […]

Read More

பொக்ரானில் நடைபெற உள்ள இந்திய விமானப்படையின் மிகப்பெரிய போர் ஒத்திகை !!

February 6, 2022

ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் வருகிற மார்ச் 5ஆம் தேதி இந்திய விமானப்படையின் வாயு ஷக்தி-2022 எனும் மெகா போர் பயிற்சி நடைபெற உள்ளது. இந்த போர் ஒத்திகையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகள் மற்றும் பல முக்கிய அதிகாரிகள் பார்வையிட உள்ளனர். இதையொட்டி ஜெய்சால்மர் விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி க்ருப் கேப்டன் அமர்தீப் சிங் பன்னூ அம்மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்தி உள்ளார். அப்போது […]

Read More

குடியரசு தின அணிவகுப்பில் பெண் அதிகாரி வழிநடத்திய கடற்படை படையணிக்கு முதல் பரிசு !!

February 6, 2022

கடந்த 26ஆம் தேதி தலைநகர் தில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் இந்திய கடற்படை படையணி லெஃப்டினன்ட் கமாண்டர் ஆஞ்சல் ஷர்மா எனும் பெண் அதிகாரியால் வழிநடத்தப்பட்டது. இந்த அணிவகுப்பில் கலந்து கொண்ட ராணுவ படைகளில் சிறப்பாக அணிவகுத்த காரணத்திற்காக இந்த கடற்படை படையணிக்கு முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படை படையணி பாப்புலர் சாய்ஸ் எனும் பிரிவில் முதன்மை படையணியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது கூடுதல் தகவல் ஆகும்.

Read More