Day: February 4, 2022

இந்தோ பசிஃபிக் பகுதியில் ஒத்துழைப்பு பற்றி இந்தியாவுடன் ஐரோப்பிய யூனியன் பேச்சுவார்த்தை !!

February 4, 2022

இந்தோ பசிஃபிக் பகுதியில் ஒத்துழைப்பு குறித்து இந்தியாவுடன் ஐரோப்பிய யூனியன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காணொளி மூலமாக நடைபெற்ற இந்த சந்திப்பின் போது இந்தியாவின் இந்தோ பசிஃபிக் செய்லபாடுகள் பற்றி விவாதிக்கப்பட்டது. பின்னர் இரண்டு கடற்படைகளும் இந்தோ பசிஃபிக் பகுதியில் இணைந்து செயல்படுவது குறித்தும் இருதரப்பு அதிகாரிகள் பேசி உள்ளனர்.

Read More

உள்நாட்டு உளவு அமைப்பில் மத்திய அரசின் மறுசீரமைப்பு பணிகள் !!

February 4, 2022

இந்தியாவின் உள்நாட்டு உளவு அமைப்பான இன்டலிஜென்ஸ் பியூரூவில் மத்திய அரசு பல்வேறு மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் ஜனவரி 31 அன்று பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில் 10 புதிய துணை இயக்குனர், 80 இணை இயக்குனர், 358 துணை மத்திய உளவுத்துறை அதிகாரி, 1110 இணை மத்திய உளவுத்துறை அதிகாரி, 442 பாதுகாப்பு உதவியாளர் என 2000 பணியிடங்களை உருவாக்கவும் அதே நேரத்தில் சுமார் 2000 இரண்டாம் நிலை இணை மத்திய உளவுத்துறை […]

Read More

ஐந்தாவது கல்வாரி ரக நீர்மூழ்கி முதலாவது கடல் சோதனைகளை துவங்கியது !!

February 4, 2022

இந்திய கடற்படையின் ஆறு கல்வாரி ரக நீர்மூழ்கிகளில் ஐந்தாவது நீர்மூழ்கி செவ்வாய்கிழமை அன்று முதலாவது கடல் சோதனைகளை துவங்கி உள்ளது. யார்ட்11879 என தற்போது அழைக்கப்படும் இந்த நீர்மூழ்கியானது கடல்சோதனைகள் நிறைவுபெற்று படையில் இணையும் போது ஐ.என்.எஸ். வாகிர் என பெயரிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பையில் அமைந்துள்ள பொதுத்துறை நிறுவனமான மஸகான் கப்பல் கட்டுமான தளம் ஃபிரான்ஸ் நாட்டின் நேவல் க்ருப் உடன் இணைந்து இவற்றை கட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Read More

100 பாகிஸ்தான் வீரர்களை கொன்று குவித்த பலூச் விடுதலை படையினர் !!

February 4, 2022

நேற்று பாகிஸ்தான் நாட்டின் பலூச்சிஸ்தான் மாகாணத்தில் உள்ள பன்ஜ்கூர் மற்றும் நூஷ்கி ராணுவ முகாம்கள் மீது பலூச் விடுதலை படையினர் தாக்குதல் நடத்தி உள்ளதாகவும் இரண்டு முகாம்களும் மிக கடுமையான சேதத்தை சந்தித்த நிலையில் 100 பாகிஸ்தான் ராணுவ வீரர்களை கொன்றிருப்பதாகவும் பலூச் விடுதலை படையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். பாகிஸ்தான் ஊடகங்கள் இதுபற்றி செய்தி ஒளிபரப்ப அனுமதிக்கப்படாத நிலையில் பாகிஸ்தான் ராணுவம் முகாம்கள் மீதான தாக்குதல் வெற்றிகரமாக முறியடிக்க பட்டதாக தகவல் வெளியிட்டுள்ளது.

Read More

பஞ்சாபில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் சுட்டு வீழ்த்திய BSF !!

February 4, 2022

எல்லை பாதுகாப்பு படையினர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஃபெரோஸ்பூர் செக்டாரில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தானியரை சுட்டு வீழ்த்தினர். எல்லை பாதுகாப்பு படையின் ரோந்து குழுவானது அத்தீமீறி நுழைய முயன்ற பாகிஸ்தான் நபரை பலமுறை எச்சரித்தும் தொடர்ந்து கேட்காமல் சர்வதேச எல்லையை கடந்ததால் வீரர்கள் அவரை சுட்டு வீழ்த்தினர். இந்த சம்பவம் ஃபெரோஸ்பூர் செக்டார் பகுதியில் அமைந்துள்ள கே எஸ் வாலா எல்லையோர காவல் சாவடிக்கு அருகே நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More