Day: February 3, 2022

எல்லையோர சாலை கட்டுமான அமைப்பின் பட்ஜெட் முதல் முறையாக 40% உயர்வு !!

February 3, 2022

இந்தியாவின் எல்லையோரங்களில் சாலைகள் பாலங்கள் சுரங்கங்கள் என் எல்லையோர உள்கட்டமைப்பு பணிகளுக்கு எல்லையோர சாலைகள் கட்டுமான அமைப்பு தான் பொறுப்பாகும். கடந்த சில ஆண்டுகளாக இந்தியா சீனா உடனான எல்லையோர பகுதிகளில் தனது நடவடிக்கைகளை விரைவுபடுத்தி பணிகமை வேகமாக நடத்தி முடிக்கும் எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு பட்ஜெட்டில் கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட 2500 கோடி ருபாயில் இருந்து 1000 கோடி ருபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ஆண்டு 3500 கோடி ரூபாய் […]

Read More

வரலாற்றிலேயே முதல்முறையாக கடலோர பாதுகாப்பு படை பட்ஜெட் சுமார் 60% உயர்வு !!

February 3, 2022

இந்தியாவின் கடலோர பாதுகாப்பை உறுதிபடுத்துவதில் அளப்பரிய பங்களிப்பை இந்திய கடலோர பாதுகாப்பு படை மேற்கொண்டு வருவது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த வருடம் இந்திய கடலோர பாதுகாப்பு படைக்கான முதன்மை செலவுக்கான பட்ஜெட் வரலாற்றில் இல்லாத அளவுக்கு சுமார் 60 சதவிகித உயர்வை சந்தித்து உள்ளது. அதாவது கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட 2650 கோடி ரூபாயில் இருந்து தற்போது சுமார் 4246 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் கூறி உள்ளது.

Read More

மியான்மரில் மிகப்பெரிய உள்நாட்டு போர் வெடிக்கும் அபாயம் !!

February 3, 2022

மியான்மரில் ராணுவம் மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கு இடையே நாளுக்கு நாள் சண்டை அதிகரித்து கொண்டே வருகிறது, கிளர்ச்சியாளர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் எனவும் கூறப்படுகிறது. நாடு முழுவதும் சண்டை பரவி உள்ளதாகவும் முன்னர் நகர்ப்புற பகுதிகளை எட்டாமல் இருந்த சண்டை தற்போது நகரங்களிலும் நடைபெற்று வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது வரை கொல்லப்பட்டோரின் தெளிவான எண்ணிக்கை தெரியவில்லை என்றாலும் கடந்த ஆண்டு ஃபெப்ரவரி முதல் தற்போது வரை சுமார் 12,000 பேர் ராணுவத்தால் கொல்லப்பட்டு இருக்கலாம் என […]

Read More

போயிங் செய்த துரோகம் சொந்தமாகவே அதிக உயர என்ஜின் சோதனை மையத்தை உருவாக்க உள்ள இந்தியா !!

February 3, 2022

இந்திய விமானப்படைக்கு சி17 போக்குவரத்து விமானங்கள் வாங்கப்பட்ட சமயத்தில் போயிங் நிறுவனம் இந்தியாவில் அதிக உயர என்ஜின் சோதனை மையம் ஒன்றையும் ட்ரைசானிக் என்ஜின் சோதனை மையம் ஒன்றையும் அமைத்து தருவதாக கூறியது. இதில் நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமானது சுமார் 47 சதவிகிதம் அளவுக்கு பங்களிப்பை தருவதாக உறுதி அளித்தது. ஆனால் போயிங் நிறுவனம் சுமார் 315 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான அதிக உயர என்ஜின் சோதனை மையம் மற்றும் 195 […]

Read More

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி !!

February 3, 2022

2022-2023ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு பட்ஜெட்டில் இந்தியாவின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை வலுப்படுத்தும் வகையில் புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதாவது இனி தனியார் பாதுகாப்பு துறை நிறுவனங்களும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளில் ஈடுபட அனுமதி வழங்கப்பட உள்ளது. அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் இணைந்து தனியார் நிறுவனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளில் ஈடுபட உள்ளதாக தெரிகிறது.

Read More

உக்ரைன் விவகாரம் இந்தியா மற்றும் சீனாவுக்கு நன்றி தெரிவித்த ரஷ்யா !!

February 3, 2022

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவின் செயல்பாடு குறித்து விவாதிக்க அமெரிக்கா தலைமையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கான ஓட்டெடுப்பில் கலந்து கொண்டு சீனா எதிராக வாக்களித்த நிலையில் இந்தியா கென்யா மற்றும் கேபோன் ஆகிய நாடுகள் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இதை தொடர்ந்து ஐநாவுக்கான ரஷ்ய தூதர் டிமித்ரி பொல்யான்ஸ்கி இந்தியா சீனா கென்யா மற்றும் கேபோன் ஆகிய நாடுகளுக்கு தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.

Read More

துணை ராணுவ படைகளின் பட்ஜெட் சுமார் 13% உயர்வு !!

February 3, 2022

நாடாளுமன்றத்தில் 2022-2023ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது அப்போது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் துணை ராணுவ படைகளுக்கான ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. கடந்து ஆண்டு துணை ராணுவ படைகளுக்கெ மொத்தமாக 90,888 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு சுமார் 1 லட்சத்து 2 ஆயிரத்து 668 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு சுமார் 13 சதவிகித உயர்வை துணை ராணுவ படைகளின் பட்ஜெட் எட்டியுள்ளது இனி விரவாக […]

Read More

370ஆவது சிறப்பு சட்டம் ரத்து செய்யபட்ட பின் 439 பயங்கரவாதிகள் காலி, 109 பாதுகாப்பு படையினர் வீரமரணம் !!.

February 3, 2022

கடந்த 2019 ஆம் ஆண்டு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு தற்போது வரை 439 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 109 பாதுகாப்பு படையினரும் வீரமரணம் அடைந்துள்ளனர் இவர்களுடன் 98 அப்பாவி பொதுமக்களும் மரணத்தை தழுவி உள்ளனர், 5 கோடி மதிப்பிலான சொத்துக்கள் நாசமாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதனை நாடாளுமன்றத்தில் உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்து மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போது தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

விமானப்படையில் பெண் விமானிகளின் பங்கு

February 3, 2022

இதுவரை விமானப்படையில் 16 பெண் போர் விமானிகள் இணைந்துள்ளனர் !! முதலில் சோதனை முயற்சியாக பெண்கள் போர் விமானிகளாக இந்திய விமானப்படைக்கு தேர்வு செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்த சோதனை கட்டம் முடிவுக்கு வந்துள்ளது. தற்போது வயை இந்திய விமானப்படையில் 16 பெண்கள் போர் விமானிகளாக இணைந்துள்ளனர், இதன் மூலம் வருங்காலத்தில் மேலதிக பெண் போர் விமானிகளுக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன என்றால் மிகையல்ல. இந்திய கடற்படையும் விமானிகளாக பெண்களை இணைத்து வருகிறது மேலும் போர் கப்பல்களிலும் பெண் […]

Read More

காஷ்மீரில் UAE முதலீடு பெருத்த பின்னடைவை சந்தித்த பாகிஸ்தான் !!

February 3, 2022

ஐக்கிய அரபு அமீரகம் சமீபத்தில் ஜம்மு காஷ்மீரில் தனது முதலீட்டை துவங்கிய நிலையில் இது காஷ்மீர் மீது கண்ணாக இருக்கும் பாகிஸ்தானுக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. ஐக்கிய நாடுகள் சபை, அரபு லீக், வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில், இஸ்லாமிய ஒத்துழைப்பு கவுன்சில், பெட்ரோல் ஏற்றுமதி நாடுகள் கூட்டமைப்பு ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கும் UAE இந்தியாவின் நட்பு நாடாகும். ஜம்மு காஷ்மீரில் லூலூ குழுமம் தனது உணவு பதப்படுத்தல் மற்றும் சரக்கு கையாளும் மையம் ஒன்றை […]

Read More