இந்தியாவை புகழ்ந்த காஷ்மீரில் கொல்லப்பட்ட பாக் பயங்கரவாதியின் மனைவி !!

  • Tamil Defense
  • January 1, 2022
  • Comments Off on இந்தியாவை புகழ்ந்த காஷ்மீரில் கொல்லப்பட்ட பாக் பயங்கரவாதியின் மனைவி !!

காஷ்மீரில் கொல்லப்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதியின் மனைவியான ரஸியா பீபி என்பவர் காஷ்மீர் இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்படுவதாகவும்,

இஸ்லாமின் பெயரால் பயங்கரவாதிகள் மக்களை மூளைச்சலவை செய்வதாகவும் உண்மையான ஜன்னத் இந்தியாவில் உள்ளதாகவும் பாகிஸ்தானில் இல்லை எனவும் அவர் பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்து உள்ளார்.

மேலும் அவர் பேசும் போது இப்படி ஏமாற்றப்படும் இளைஞர்கள் பயங்கரவாத இயக்கத்தில் இணையும் போது அவர்களின் வாழ்க்கையும் அவர்களின் குடும்பங்களும் மிகுந்த கஷ்டத்திற்கு உள்ளாவதாக கூறியுள்ளார்.

இப்படி மூஜாஹீத் ஆகும் இளைஞர்கள் ஏதேனும் என்கவுன்டரில் கொல்லப்பட்டால் அவ்ரகளின் குடும்பங்கள் நிற்கதியாகின்றன யாரும் அந்த குடும்பங்களை கவனிப்பதில்லை என்றார்.