
ஜனாதிபதியின் பாதுகாவலர்கள் ரெஜிமென்ட்டில் சேவை புரிந்த விராட் எனும் குதிரை நேற்றுடன் ராணுவ சேவையில் இருந்து ஒய்வு பெற்றது.
சுமார் 13 ஆண்டுகள் தொடர்ந்து குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற இந்த குதிரை அந்த ரெஜிமென்ட்டிலேயே நம்பகத்தன்மை அதிகமான குதிரை என கூறப்படுகிறது.
மேலும் விராட்டின் நீண்ட கால சேவையை பாராட்டி ராணுவ தளபதி பாராட்டு அட்டையை வழங்கி கவுரவித்தார் இந்த சிறப்பை பெறும் முதல் குதிரை விராட் என்பது குறிப்பிடத்தக்கது.