
சமீபத்தில் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் இந்திய துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு ஆகியோர் அடுத்தடுத்து இரண்டு வார காலத்திற்குள் விக்ராந்த் கப்பலை பார்வையிட்ட நிலையில்,
தற்போது முன்றாவது கட்ட கடல் சோதனைகளுக்காக கொச்சியில் இருந்து விக்ராந்த் அரபி கடல் பகுதியில் நுழைந்துள்ளது.
முதல் கட்ட கடல் சோதனைகளில் கப்பலின் என்ஜின், வழிகாட்டி அமைப்பு மற்றும் அடிப்படை செயல்பாடுகள் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டன.
இரண்டாம் கட்ட கடல் சோதனைகளின் போது கப்பலில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு வகையான இயந்திரங்கள் மற்றும் வானூர்தி இயக்கம் ஆகியவை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டன.
தற்போது மூன்றாவது கட்ட கடல் சோதனைகளின் போது பல்வேறு வகையான சூழல்களில் கப்பலின் இயங்கு திறனை பல்வேறு வகையான நடவடிக்கைகள் மூலமாக சோதனை செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.