
உக்ரைன் அதிபர் வோலோடிமீர் செகன்ஸ்கியுடன் அமெரிக்க அதிபர் ஜோசப் பைடன் ரஷ்யாவின் ராணுவ படையெடுப்பு அச்சுறுத்தல் குறித்து பேச உள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரைனுடைய க்ரைமியா தீபகற்ப பகுதியை கைப்பற்றிய நிலையில் தற்போது உக்ரைன் உடனான எல்லையோரம் மிகப்பெரிய அளவில் படைகளை குவித்துள்ளது.
மேலும் சில நாட்கள் முன்னர் அமெரிக்கா இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நேட்டோ நாடுகள் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால் மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்தன.
குறிப்பாக அமெரிக்க அதிபர் ஜோசப் பைடன் ரஷ்யாவால் உக்ரைன் மீது படையெடுக்க முடியாது என முதல்முறையாக நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.