எஸ்400 ஒப்பந்தம் அமெரிக்கா அதிருப்தி; சுயமான வெளியுறவு கொள்கையை இந்தியா பின்பற்றும் பதிலடி !!

  • Tamil Defense
  • January 29, 2022
  • Comments Off on எஸ்400 ஒப்பந்தம் அமெரிக்கா அதிருப்தி; சுயமான வெளியுறவு கொள்கையை இந்தியா பின்பற்றும் பதிலடி !!

இந்தியா ரஷ்யாவுடன் செய்து கொண்ட சுமார் 5 பில்லியன் டாலர் மதிப்பிலான எஸ்400 வான் பாதுகாப்பு அமைப்பிற்கான ஒப்பந்தம் அமெரிக்காவை உறுத்தி வருகிறது.

அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ப்ரைஸ் இந்த செயல்பாடு பிராந்திய சமநிலையை பாதிக்கும் என அமெரிக்காவின் அதிருப்தியை பதிவு செய்துள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள இந்திய அரசு இந்தியா தொடர்ந்து சுயமான வெளியுறவு கொள்கையை பின்பற்றும் என யாருடைய அழுத்ததிற்கும் அடிபணிய மாட்டோம் என்ற ரீதியில் பதிலடி கொடுத்துள்ளது.