Breaking News

போர் ஏற்பட்டால் ரஷ்யாவை எதிர்க்க திராணியற்ற நிலையில் உள்ள உக்ரைன் ராணுவம் !!

  • Tamil Defense
  • January 7, 2022
  • Comments Off on போர் ஏற்பட்டால் ரஷ்யாவை எதிர்க்க திராணியற்ற நிலையில் உள்ள உக்ரைன் ராணுவம் !!

கடந்த 2014ஆம் ஆண்டு ரஷ்ய ராணுவம் உக்ரைனுடைய க்ரைமியா பகுதியை படையெடுத்து கைபற்றி ரஷ்யாவுடன் இணைத்து கொண்டது அப்போது உக்ரைன் ராணுவத்தால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

தற்போது உக்ரைன் ராணுவம் அன்றைய நாட்களை ஒப்பிடுகையில் வெகுவாக வலுவடைந்து கடந்த முறையை விடவும் இம்முறை அதிக தயார்நிலையில் உள்ளது.

ஆனாலும் அதிநவீனமான ஆயுத அமைப்புகள் தளவாடங்கள் மற்றும் போதிய நிதி இல்லாத காரணத்தால் உக்ரைன் ராணுவம் தற்போதும் ரஷ்யாவிடம் தோல்வியை தழுவும் நிலையில் உள்ளது.

மாறாக ரஷ்ய தரைப்படை கடற்படை விமானப்படை ஆகியவை அதிநவீனமான தளவாடங்கள் அதிக நிதி ஆள் பலம் பொருந்தி உலக வல்லரசுகளில் ஒன்றாக விளங்குகிறது.

ஆகவே ரஷ்யாவுடன் போர் ஏற்பட்டால் உக்ரைனுடைய மேற்குலக நட்பு நாடுகள் ஆயுதங்கள் அளித்தால் மட்டுமே உக்ரைன் படைகளால் தாக்குப்பிடிக்க முடியும்.

ஆனால் தற்போது வரை வான் பாதுகாப்பு அமைப்புகள் போன்றவற்றிற்கான உக்ரைனுடைய கோரிக்கைகள் செவிடன் காதில் சங்கு ஊதிய நிலையில் உள்ளது.

அமெரிக்கா மட்டும் சைபர் போர்முறை அமைப்புகள், துப்பாக்கிகள், குண்டு துளைக்காத உடைகள், ஜாவ்லின் டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் ஆகியவற்றை வழங்க முன்வந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.