உக்ரைனுக்கு டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை டெலிவரி செய்த இங்கிலாந்து மூளும் போர் பதட்டம் !!

  • Tamil Defense
  • January 19, 2022
  • Comments Off on உக்ரைனுக்கு டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை டெலிவரி செய்த இங்கிலாந்து மூளும் போர் பதட்டம் !!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே மிகவும் பதட்டமான சூழல் நிலவும் பட்சத்தில் இங்கிலாந்து உக்ரைனுக்கு டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை அனுப்பி வைத்துள்ளது.

இந்த தகவலை பிரிட்டன் பாதுகாப்பு துறை அமைச்சர் பென் வால்லெஸ் பாராளுமன்றத்தில் உக்ரைன் தற்காத்து கொள்ள உதவும் வகையில் குறுந்தூர ஏவுகணைகளை டெலிவரி செய்ததாக அறிவித்தார்.

ரஷ்யாவின் டாங்கிகள் உக்ரைனுக்குள் படையெடுத்து ஊடுருவினால் இது உக்ரைனுக்கான இங்கிலாந்தின் முதல்கட்ட உதவியாக அமையும் எனவும் அவர் அறிவித்தார்.

ரஷ்யாவுமீ சமீபத்தில் உக்ரைன் உடனான எல்லையை நோக்கி ஆயிரக்கணக்கான டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களை அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.