
சமீபத்தில் ஃபிலிப்பைன்ஸ் இந்தியாவிடம் இருந்து மூன்று பிரம்மாஸ் ஏவுகணை அமைப்புகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்ததை அனைவரும் அறிவோம்.
இந்த மூன்று அமைப்புகள் அவற்றை இயக்கும் வீரர்கள் மற்றும் பராமரிக்கும் வீரர்களுக்கான பயிற்சி செலவுகள அனைத்தையும் இந்த ஒப்பந்தம் உள்ளடக்கியதாகும்.
இந்த நிலையில் அரேபிய நாடுகளான சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவையும் இந்தியாவிடம் இருந்து ஏவுகணைகள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றன.
இந்தியாவின் ஆகாஷ் மற்றும் பிரம்மாஸ் ஏவுகணைகள் மீது UAE ஆர்வம் காட்டிய நிலையில் இது குறித்த பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.