அபுதாபியில் ட்ரோன் தாக்குதல் இரண்டு இந்தியர்கள் மரணம் !!

  • Tamil Defense
  • January 18, 2022
  • Comments Off on அபுதாபியில் ட்ரோன் தாக்குதல் இரண்டு இந்தியர்கள் மரணம் !!

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபு தாபி விமான நிலையத்தில் நடைபெற்ற ட்ரோன் தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டும் ஆறு பேர் காயமடைந்தும் உள்ளனர்.

கொல்லப்பட்ட மூவரில் இருவர் இந்தியர் என்பதையும் ஒருவர் பாகிஸ்தானியர் என்பதையும் அபு தாபி காவல்துறை உறுதிபடுத்தியுள்ளது காயமடைந்தோர் பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.

இது தவிர அபுதாபி நகருக்கு 22 கிலோமீட்டர் வெளியே அமைந்துள்ள எண்ணெய் கிடங்கு மீதும் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில மூன்று எரிபொருள் டேங்கர்கள் வெடித்து சிதறின இங்கிருந்து தான் ஒட்டுமொத்த ஐக்கிய அரபு அமீரகத்தின் எண்ணெய் சப்ளை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இது பற்றி அபு தாபி காவல்துறை வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த தாக்குதலை ஈரான் ஆதரவு பெற்ற ஏமனுடைய ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்தியதாக தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகம் ஏமனில் நடைபெற்ற போரில் சவுதி அரேபியா உடன் கூட்டாக பங்கேற்ற நிலையில் தனது படைகளை விலக்கி கொண்டது எனினும் கிளர்ச்சியாளர்களை எதிர்த்து வருகிறது.

சமீபத்தில் கூட ஐக்கிய அரபு அமீரக நாட்டிற்கு சொந்தமான எண்ணெய் கப்பல் ஒன்றை ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் சிறைப்பிடித்து இருப்பது கூடுதல் தகவல் ஆகும்.