இந்திய ராணுவத்தில் பணியாற்றிய 5 திரைப்பட பிரபலங்கள் !!

  • Tamil Defense
  • January 30, 2022
  • Comments Off on இந்திய ராணுவத்தில் பணியாற்றிய 5 திரைப்பட பிரபலங்கள் !!

1) ஆனந்த் பக்ஷி: ராயல் இந்திய கடற்படையில் பணியாற்றியவர் இவர் பல பாலிவுட் படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார் அவற்றில் பல சூப்பர்ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.

2) குஃபி பைன்தால் : இவர் மகாபாரத தொலைக்காட்சி தொடரில் சகுனியாக நடித்து புகழ் பெற்றவர் ஆவார், 1962 இந்திய சீன போரின் போது கல்லூரி மாணவராக இருந்தவர் உடனடியாக ராணுவத்தில் இணைந்து சேவையாற்றியவர் ஆவார்.

3) பிக்ரம்ஜீத் கன்வர்பால்: காலஞ்சென்ற நடிகரான இவர் இவர் இந்திய தரைப்படையில் மேஜராக பணியாற்றியவர் இவரது தந்தை லெஃப்டினன்ட் கர்னல் துவாரகா நாத் கன்வர்பாலும் தரைப்படை அதிகாரி ஆவார்.

4) ரூத்ராஷிஷ் மஜூம்தார்: இந்திய தரைப்படையில் மேஜர் அந்தஸ்து அதிகாரியாக பணியாற்றிய இவர் இன்று பாலிவுட்டில் பிசி, சுஷாந்த் சிங் ராஜ்புட் உடன் சிச்சோரே படத்தில் நடித்துள்ளார், தற்போது ஷாஹித் கபூருடன் ஜெர்சி படத்தில் நடித்து வருகிறார்.

மோகன்லால்: மலையாள சினிமாவின் சூப்பர்ஸ்டாரான மோகன்லால் இந்திய பிராந்திய தரைப்படையில் கவுரவ அதிகாரி ஆவார், 2009ஆம் ஆண்டு லெஃப்டினன்ட் கர்னல் அந்தஸ்து பெற்ற இவர் முறையான ராணுவ பயிற்சியையும் முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.