தமிழக அரசு சுமார் 10 கோடி ரூபாய் மூதலீட்டில் தமிழ்நாடு ஆளில்லா வானூர்தி கார்ப்பரேஷன் ( Tamilnadu Unmanned Aerial Vehicles Corporation) எனும் நிறுவனத்தை ஆரம்பித்து உள்ளது.
இந்த நிறுவனம் பலதிறன் ட்ரோன்கள், கண்காணிப்பு, தேடுதல் மற்றும் மீட்பு பணிகளுக்கான ட்ரோன்கள் மற்றும் அவற்றை சார்ந்த அமைப்புக்களை சொந்தமாக வடிவமைத்து தயாரித்து விற்பனை செய்வதை நோக்கமாக கொண்டு இயங்கும் என கூறப்படுகிறது.
ஏற்கனவே சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தின் மெட்ராஸ் தொழில்நுட்ப கல்லூரியின் ஏரோஸ்பேஸ் ஆராய்ச்சி மையம் இத்தகைய பணிகளை மேற்கொண்டு வந்தது.
இந்த மையத்தால் தயாரிக்கப்பட்ட ஆளில்லா வானூர்திகளை தமிழக காவல்துறை கண்காணிப்பு பணிகளிலும் மாநில பேரிடர் மீட்பு துறை தேடுதல் மற்றும் மீட்பு பணிகளுக்காகவும் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.