
மும்பையில் உள்ள இந்திய கடற்படையின் மேற்கு பிரிவு கடற்படை தளத்தில் முன்னனி போர்கப்பலான ஐ.என்.எஸ். ரன்வீர் நிறுத்தப்பட்டு இருந்தது.
அப்போது நேற்று தீடிரென ஐ.என்.எஸ். ரன்வீர் நாசகாரி கப்பலுக்கு உள்ள ஒரு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததில் மூன்று கடற்படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
கப்பலில் பணியில் இருந்த மற்ற வீரர்கள் அனைவரும் உடனடியாக விரைந்து செயல்பட்டு தீயை அணைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தற்போது இந்திய கடற்படை தலைமையகம் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது.
ஐ.என்.எஸ் ரன்வீர் கிழக்கு கடற்படை பிரிவை சேர்ந்த கப்பலாகும் ஆனால் தற்காலிகமாக மேற்கு கடற்படை பிரிவில் இருந்ததும் விரைவில் விசாகப்பட்டினம் திரும்பி செல்ல இருந்ததும் குறிப்பிடத்தக்கது.