சீன அச்சுறுத்தல்; இந்தியாவுக்கு தொலைதூர சூப்பர்சானிக் குண்டுவீச்சு விமானங்கள் தேவையா ??

சீனா தற்போது 200 க்கும் அதிகமான “ஷியான் H-6K” எனப்படும் தொலைதூர ஜெட் குண்டுவீச்சு விமானங்களை இயக்கி வருகிறது.

மேலும் எதிர்காலத்தில் ஷியான் H-20 எனப்படும் சப்சானிக் குண்டுவீச்சு போர் விமானங்களையும் படையில் இணைக்க உள்ளது இப்படி நாளுக்கு நாள் சீன குண்டுவீச்சு விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் இந்திய விமானப்படை ரஷ்யாவிடம் இருந்து Tupolev TU-160M ரக சூப்பர்சானிக் தொலைதூர குண்டுவீச்சு விமானங்களை வாங்குவது நல்லது என்ற கருத்து எழுந்துள்ளது.

பிரம்மாஸ்- ஏ மற்றும் அடுத்த தலைமுறை பிரம்மாஸ் ஏவுகணைகள் தாங்கிய TU-160M ரக விமானங்கள் ஊடுருவி சென்று பாதுகாப்பான நிலையில் இருந்து முக்கிய இலக்குகளை தாக்கி அழிக்க உதவும்.

ஏற்கனவே ரஷ்யா தனது கடல்சார் TU22M3 ரக சூப்பர்சானிக் தொலைதூர குண்டுவீச்சு விமானத்தை விற்க முன்வந்ததும் அவற்றில் இந்தியா ஆர்வம் காட்டியதும் குறிப்பிடத்தக்கது.