மறைந்த முன்னாள் சீன அதிபர் சோ என்லா மீதான கொலை முயற்சி கண்டுபிடித்த இந்திய உளவுத்துறை அதிகாரி சொல்லப்படாத கதை !!

  • Tamil Defense
  • January 26, 2022
  • Comments Off on மறைந்த முன்னாள் சீன அதிபர் சோ என்லா மீதான கொலை முயற்சி கண்டுபிடித்த இந்திய உளவுத்துறை அதிகாரி சொல்லப்படாத கதை !!

மறைந்த முன்னாள் சீன அதிபர் சோ என்லா மீதான கொலை முயற்சியின் மர்ம முடிச்சுகளை தனது திறமையான விசாரணையால் கட்டவிழ்த்த இந்திய உளவுத்துறை அதிகாரி ரமேஷ்வர் நாத் காவோவின் கதை இது.

கடந்த 1955ஆம் ஆண்டு சீன அதிபர் சோ என்லாய் இந்திய விமான நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமான காஷ்மீர் இளவரசி (KASHMIR PRINCESS) எனப்படும் அமெரிக்க Lockheed நிறுவன தயாரிப்பான L-749A CONSTELLATION விமானம் ஒன்றில் பயணிக்க இருந்தார், ஆனால் இந்த விமானம் மர்மமான முறையில் விபத்தை சந்தித்தது.

ஹாங்காங்கில் இருந்து புறப்பட்ட விமானம் இந்தோனேசியாவில் விபத்தை சந்தித்தது, விமானம் அமெரிக்க தயாரிப்பு ஆனால் இந்திய நிறுவனத்துக்கு சொந்தமானது அதில் பயணிக்க இருந்தவர் சீன அதிபர் ஆகவே மேற்குறிப்பிட்ட ஐந்து நாடுகளும் இந்த விசாரணையில் பங்கேடுத்தன இதனால் பலமான அரசியல் நெருக்கடிகளுக்கு இடையே காவோ வேலை செய்ய வேண்டியதாகிற்று.

தீவிர விசாரணைக்கு பிறகு முன்னாள் தைவான் அதிபர் சியாங் காய்ஷெக் தூண்டுதலின் பேரில் ஹாங்காங்கில் அமைந்திருந்த ஹாங்காங் விமான பொறியியல் நிறுவனத்தில் பராமரிப்பு பணியாளராக பணியாற்றி வந்த சவ் சூ செயல்பட்டது தெரிய வந்தது

பராமரிப்பு பணியில் இருந்த விமானத்தில் சோ என்லாய் பயணிக்க உள்ளார் என தெரிந்ததும் சுமார் 6 லட்சம் ஹாங்காங் டாலர்களை பெற்று கொண்டு ஒரு டைம் பாமை அந்த விமானத்தில் பொருத்தியுள்ளார்.

ஆனால் சோ என்லாயின் பயணம் ரத்தான நிலையில் வேறு பயணிகளுடன் புறப்பட்ட விமானத்தில் இருந்த வெடிகுண்டு வெடித்ததில் விமானம் நடுவானிலேயே வெடித்து சிதறி இந்தோனேசியாவில் விழுந்தது.

காவோவின் திறமையை கண்டு வியந்த சோ என்லாய் அவருக்கு சிறப்பாக செயல்படும் சீன அரசு அதிகாரிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் தனது தனிப்பட்ட முத்திரையை வழங்கி கவுரவித்து பாராட்டினார்.

இந்த விசாரணையில் காவோவுக்கு கிடைத்த பிரிட்டிஷ் உளவுத்துறை நட்பு வட்டாரங்கள் தான் பின்னாளில் இந்தியாவின் உளவுத்துறையான ரா வை உருவாக்க உதவியது என்பது குறிப்பிடத்தக்கது.