இந்தியாவில் வரவிருக்கும் மாநில தேர்தல்களை ஒட்டி தொடர் குண்டுவெடிப்பு நிகழ்த்த பாகிஸ்தான் சதி அம்பலமானது !!

  • Tamil Defense
  • January 20, 2022
  • Comments Off on இந்தியாவில் வரவிருக்கும் மாநில தேர்தல்களை ஒட்டி தொடர் குண்டுவெடிப்பு நிகழ்த்த பாகிஸ்தான் சதி அம்பலமானது !!

இந்தியாவில் உத்தர பிரதேசம், உத்தராகன்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டபேரவைக்கான தேர்தல்கள் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளன.

இதனை வாய்ப்பாக பயன்படுத்தி கொண்டு பாகிஸ்தானுடைய ஐ.எஸ்.ஐ அமைப்பானது இந்தியாவில் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்களை நிகழ்த்த தீட்டிய சதி திட்டம் அம்பலமாகி உள்ளது.

பாகிஸ்தானில் இருந்து ஆளில்லா வானூர்திகள் மூலமாக இந்திய பகுதியில் தாக்குதலுக்கான குண்டுகள் வீசப்படும் இவற்றை கொண்டு பயங்கரவாதிகள் தேர்தல்களை சீர்குலைக்கலாம் என கூறப்படுகிறது.

சமீபத்தில் தலைநகர் தில்லியில் 3 கிலோகிராம் எடை கொண்ட RDX குண்டும் பஞ்சாபில் உள்ள குர்தாஸ்பூரில் 2.5 கிலோ அளவிலான வெடி குண்டும் கண்டு பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.