முதல்முறையாக ஜூன் விண்ணை தொட உள்ள தேஜாஸ் மார்க்-1ஏ போர் விமானம் !!

இந்த வருடம் ஜூன் மாதம் இலகுரக தேஜாஸ் மார்க் – 1ஏ ரக போர் விமானம் முதல் முறையாக விண்ணில் பறக்க உள்ளது இது மார்க்-1 வடிவத்தின் மேம்பட்ட ரகமாகும்.

சுமார் 20 முதல் 24 மாதங்களுக்கு அதாவது இரண்டு ஆண்டு காலத்திற்கு மார்க் – 1 ஏ போர் விமானம் பல்வேறு வகையான சோதனைகளுக்கு உட்படுத்தப்படும் அது நிறைவு பெற்றதும் தயாரிப்பு டெலிவரி துவங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த வருடமே மார்க்-1 ரகத்தை சேர்ந்த 10 போர் விமானங்களை ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் டெலிவரி செய்ய உள்ளதாக அதன் தலைவர் மாதவன் கூறியுள்ளார்.

இஸ்ரேலில் இருந்து சில அமைப்புகள் வருவதற்கு காத்திருப்பதாகவும் அவை வந்தவுடன் போர் விமானங்களில் பொருத்தப்பட்டு இந்திய விமானப்படையிடம் டெலிவரி செய்யப்படும் எனவும் கூறினார்.

அதை போல 2023ஆம் ஆண்டு இலகுரக தேஜாஸ் விமானங்களின் வரிசையில் பெரியதான மார்க்-2 ரகம் வெளிவரும் என ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவன தலைவர் மாதவன் கூறினார் என்பது கூடுதல் தகவல் ஆகும்.