அமெரிக்க ஆயுதங்களுடன் காபூலில் அணிவகுப்பு நடத்திய தாலிபான்கள் !!

  • Tamil Defense
  • January 11, 2022
  • Comments Off on அமெரிக்க ஆயுதங்களுடன் காபூலில் அணிவகுப்பு நடத்திய தாலிபான்கள் !!

ஆஃப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தாலிபான்கள் அமெரிக்க ஆயுதங்களுடன் அணிவகுப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தி உள்ளனர்.

மேற்குலக நாடுகளின் ஆதரவு பெற்ற ஆஃப்கானிஸ்தான் அரசு வீழச்சி அடைந்த பின்னர் நேட்டோ படைகள் விட்டு சென்ற ஆயுதங்கள் அனைத்தும் தாலிபான்கள் வசம் சென்றது குறிப்பிடத்தக்கது.

இந்த அணிவகுப்பு நிகழ்ச்சி பற்றி பேசிய ஆஃப்கானிஸ்தான் பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் இனையத்துல்லா 250 வீரர்களின் பயிற்சி நிறைவு விழா என குறிப்பிட்டார்.

டஜன் கணக்கான எம்-117 கவச வாகனங்கள் சாலையில் செல்ல, மி-17 ஹெலிகாப்டர்கள் வானில் பறக்க தாலிபான் படை வீரர்கள் அமெரிக்க தயாரிப்பு எம்-14 துப்பாக்கிகளுடன் அணிவகுத்தனர்.