தில்லி காவல்துறையில் ஒய்வு பெறாத துணை ராணுவ வீரர்கள் இணைய ஏற்பாடு !!

  • Tamil Defense
  • January 20, 2022
  • Comments Off on தில்லி காவல்துறையில் ஒய்வு பெறாத துணை ராணுவ வீரர்கள் இணைய ஏற்பாடு !!

தில்லி காவல்துறை ஆணையர் திரு. ராகேஷ் அஸ்தானா தற்போது பணியில் இருக்கும் துணை ராணுவ படை வீரர்கள் தில்லி காவல்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பும் வகையில் இணைவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.

இது பற்றி காவல் ஆணையர் ராகேஷ் அஸ்தானா மத்திய ரிசர்வ் காவல்படை, எல்லை பாதுகாப்பு படை, சஷாஸ்திர சீமா பல், இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை ஆகிய படைகளின் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஏற்கனவே எல்லை பாதுகாப்பு படையின் தலைவராக பணியாற்றிய அனுபவம் கொண்ட திரு. ராகேஷ் அஸ்தானாவுக்கு துணை ராணுவ வீரர்களின் திறன் அத்துபடி ஆகவே தான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

கான்ஸ்டபிள் முதல் ஆய்வாளர் பதவிகளில் பணியாற்றுபவர்களாகவும், 56 வயதுக்கு கீழே உள்ளவர்களாகவும், நன்னடத்தை சான்றிதழ் ஆகியவற்றை பெற்றிருக்கவும் வேண்டும் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை பணியாற்றலாம் பின்னர் தங்களது படைகளுக்கு திரும்ப வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.