புல்வாமா ஆபரேஷன் வெற்றியில் முக்கிய பங்கு வகித்து சிகிச்சை பெற்று வரும் கருட் சிறப்பு படையினர் !!

  • Tamil Defense
  • January 31, 2022
  • Comments Off on புல்வாமா ஆபரேஷன் வெற்றியில் முக்கிய பங்கு வகித்து சிகிச்சை பெற்று வரும் கருட் சிறப்பு படையினர் !!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் சனிக்கிழமை அன்று நடைபெற்ற என்கவுன்டரில் நான்கு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர்.

இந்த ஆபரேஷனுடைய வெற்றியில் இந்திய விமானப்படையின் சிறப்பு படை பிரிவான கருட் கமாண்டோக்கள் மிக முக்கிய பங்கு வகித்துள்ளனர் எனும் தகவல் வெளியாகியுள்ளது.

சண்டையின் போது ஸ்க்வாட்ரன் லீடர் சந்தீப் ஜன்ஜாரியா எனும் கருட் அதிகாரி மார்பிலும் இடது கையிலும் தோட்டா பாய்ந்து கடுமையான காயமடைந்த நிலையிலும் பயங்கரவாதிகளை தாக்கி கொண்டே இருந்தார்.

இதில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் நான்காவது பயங்கரவாதி பதுங்குமிடத்தை விட்டு வெளியே வந்து கருட் வீரர்கள் இருக்கும் இடத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளான்.

இதில் கருட் படையணியை சேர்ந்த கார்ப்போரல் ஆனந்த் தோட்டா பாய்ந்து காயமடைந்தார் ஆனால் படைகள் விரைந்து நான்காவது பயங்கரவாதியையும் சுட்டு வீழ்த்தினர்.

தற்போது சண்டையில் காயமடைந்த இரண்டு கருட் கமாண்டோ வீரர்களும் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.