சௌரிய சக்ரா விருது பெற்ற ஆறு இராணுவ வீரர்கள்

  • Tamil Defense
  • January 26, 2022
  • Comments Off on சௌரிய சக்ரா விருது பெற்ற ஆறு இராணுவ வீரர்கள்

இந்தியாவில் அமைதிக் காலத்தில் வழங்கப்படும் மூன்றாவது இராணுவ உயரிய விருதான சௌரிய சக்ரா ஆறு வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.இதில் ஐந்து வீரர்கள் வீரமரணத்திற்கு பிறகு இந்த விருதை பெறுகின்றனர்.

நாய்ப் சுபேதார் ஸ்ரீஜித் , சிபாய் ஜஸ்வந்த் குமார் ரெட்டி ஆகிய இரு வீரர்களும் மெட்ராஸ் ரெஜிமென்டை சேர்ந்தவர்கள்.இராஜ்புத் ரெஜிமென்டை சேர்ந்த ஹவில்தார் அனில் குமார் என்ஜினியரிங் கோரை சேர்ந்த ஹவில்தார் காசிரே பம்மனல்லி மற்றும் ஜாட் ரெஜிமென்ட்டை சேர்ந்த பிங்கு குமார் ஆகியோருக்கு வீரமரணத்திற்கு பிறகு விருது வழங்கப்பட்டுள்ளது.

5வது அஸ்ஸாம் ரைபிள்சை சேர்ந்த ரைபிள்மேன் ராகேஷ் சர்மாவிற்கு சௌரிய சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது.

பயங்கரவாததிற்கு எதிராக சிறப்பாக செயல்பட்டமைக்காக ஆறு வீரர்களுக்கும் சௌரிய சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது.