சீனாவுக்கு எதிரான க்வாட் நாடுகளுடன் கனடா மற்றும் தென் கொரியா பங்கேற்ற மாபெரும் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் பயிற்சி !!

  • Tamil Defense
  • January 22, 2022
  • Comments Off on சீனாவுக்கு எதிரான க்வாட் நாடுகளுடன் கனடா மற்றும் தென் கொரியா பங்கேற்ற மாபெரும் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் பயிற்சி !!

ஃபிலிப்பைன்ஸ் அருகேயுள்ள அமெரிக்காவுக்கு சொந்தமான க்வாம் கடற்படை தளத்தில் 2022ஆம் ஆண்டிற்கான வருடாந்திர சீ ட்ராகன் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் பயிற்சி நடைபெற்றது.

இந்த போர் பயிற்சியில் இந்தியா அமெரிக்கா ஜப்பான் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் தென் கொரியா மற்றும் கனடா ஆகிய நாடுகளும் பங்கேற்ற நிலையில் இது சீனாவுக்கு எதிரான எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

இந்த போர் பயிற்சிக்கு இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகியவை P8 பொசைடான், ஜப்பான் கவாஸாகி P1, கனடா CP-140 அரோரா மற்றும் ஆஸ்திரேலியா P3C ஒராயன் ஆகிய நீர்மூழ்கி வேட்டை விமானங்களை அனுப்பியுள்ளன.

270 மணி நேரம் பறக்கும் விமானங்கள் செயற்கையான இலக்குகளை அடையாளம் கண்டு அழிக்க வேண்டும், பின்னர் ஒரு நிஜ நீர்மூழ்கியை கண்டுபிடிக்க வேண்டும் இதன் அடிப்படையில் முதலிடம் பெறும் நாட்டிற்கு சீ ட்ராகன் பெல்ட் விருது வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.