ரஷ்யா தனது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியாவிற்கு விற்பனை செய்தது பிராந்திய ஸ்திரத்தன்மையை பாதிக்கும் என அமெரிக்கா கூறியுள்ளது.
அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் ப்ரைஸ் சமீபத்தில் அளித்த பேட்டியில் இதுவரை CAATSA தடையை இந்தியா மீது விதிக்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்பது பற்றி முடிவெடுக்கவில்லை
எனினும் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் இந்திய அரசுடன் இது குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் குறிப்பிட்ட அவர்,
உலக நாடுகள் ரஷ்யாவுடன் எந்த வித ராணுவ தொடர்புகள் அல்லது வர்த்தக ரீதியிலான உறவுகளை வைத்து கொள்வதை தவிர்க்க வேண்டும் எனவும் கூறினார்.