
ரஷ்ய கடற்படையின் ஏவுகணை கப்பலான வர்யாக், நாசகாரி கப்பலான அட்மிரல் ட்ரிபூஸ் மற்றும் டேங்கர் கப்பலான போரிஸ் பூடோமா ஆகியவை இரண்டு நாள் சுற்றுபயணமாக கொச்சி துறைமுகம் வந்துள்ளன.
மூன்று ரஷ்ய போர் கப்பல்களையும் மூத்த இந்திய கடற்படை அதிகாரிகள் கடற்படை இசை குழுவின் இசை கச்சேரி சகிதம் வரவேற்றனர்.
ரஷ்ய படையணியின் தலைவர் கேப்டன் அனடோலி வெலிஷ்கோ, வர்யாக்கின் கட்டளை அதிகாரி கேப்டன் ரோமன் க்லுஷாகோவ், அட்மிரல் ட்ரிபூஸின் கட்டளை அதிகாரி கேப்டன் இகோர் டோல்பாடோவ் ஆகியோர் தென்னக கடற்படை தளபதி ரியர் அட்மிரல் ஆண்டனி ஜார்ஜை சந்தித்து பேசினர்.