புதிய குண்டுவீச்சு விமானத்தை சோதனை செய்த ரஷ்யா !!

  • Tamil Defense
  • January 14, 2022
  • Comments Off on புதிய குண்டுவீச்சு விமானத்தை சோதனை செய்த ரஷ்யா !!

சமீபத்தில் ரஷ்யா TU-160M எனும் புதிய அதிநவீன தொலைதூர சூப்பர்சானிக் குண்டுவீச்சு விமானத்தை 30 நிமிடங்ஙளுக்கு கஸான் ஏவியேஷன் தொழிற்சாலை பகுதியில் வெற்றிகரமாக சோதனை செய்தது.

கடந்த பல ஆண்டுகளில் முதல் முறையாக ரஷ்யா தயாரித்த இந்த TU-160M ரக குண்டுவீச்சு விமானங்கள் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள TU-160 தொலைதூர சூப்பர்சானிக் குண்டுவீச்சு விமானங்களின் மேம்படுத்தப்பட்ட வடிவமாகும்.

இந்த புதிய TU-160M தொலைதூர சூப்பர்சானிக் குண்டுவீச்சு விமானங்களில் அதிநவீன ஏவியானிக்ஸ் மற்றும் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.