இந்திய கடலோர காவல்படைக்கு ஹெலிகாப்டர்கள் வழங்கும் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய ரஷ்யா !
1 min read

இந்திய கடலோர காவல்படைக்கு ஹெலிகாப்டர்கள் வழங்கும் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய ரஷ்யா !

இந்திய கடலோர காவல்படைக்கு 15 இரட்டை என்ஜின் ஹெலிகாப்டர்கள் கடலோர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள தேவைப்படுகிறது.

சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான இந்த ஒப்பந்தம் 2012ஆம் ஆண்டு முதலே பல்வேறு தடைகளை சந்தித்து தோல்வியடைந்து வரும் நிலையில்

இந்த புதிய முயற்சி கடந்த ஆண்டு ஜீன் மாதம் துவங்கியது அப்போது ரஷ்யா தனது காமோவ் – 32A11M மற்றும் ஏர்பஸ் நிறுவனம் தனது H225M ஆகிய ஹெலிகாப்டர்களுடன் போட்டியில் பங்கேற்றன.

தற்போது இந்த போட்டியில் இருந்து ரஷ்யா வெளியேறுவதாக அறிவித்துள்ளது இதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை, அமெரிக்காவும் இந்த போட்டியில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.