பெலாரஸ் நாட்டில் பேன்ட்சிர் ஏவுகணை அமைப்பை குவித்துள்ள இரஷ்யா

  • Tamil Defense
  • January 29, 2022
  • Comments Off on பெலாரஸ் நாட்டில் பேன்ட்சிர் ஏவுகணை அமைப்பை குவித்துள்ள இரஷ்யா

உக்ரேன் உடனான இரஷ்யாவின் மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் பயிற்சி என்ற பெயரில் பெலாரஸ் நாட்டில் பேன்ட்சீர் மற்றும் விமான எதிர்ப்பு துப்பாக்கிகளை இரஷ்யா குவித்துள்ளது.பயிற்சிக்காக 12 பேன்ட்சிர் ஏவுகணை அமைப்புகள் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த பயிற்சி பிப்ரவரி மாதம் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.கார்கோ ட்ரெயின் மூலம் இந்த ஏவுகணை அமைப்புகள் பெலாரஸ் நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளன.ஆயுதங்களுக்கு பிறகு தேவையான வீரர்களையும் அனுப்ப உள்ளதாக இரஷ்யா கூறியுள்ளது.

இது தவிர சு-35 விமானங்களையும் இரஷ்யா பெலாரசில் நிறுத்தியுள்ளது.மேலும் இரஷ்ய பாரா ட்ரூப் வீரர்களும் அங்கு அனுப்பப்பட்டுள்ளனர்.பிப்ரவரி 9 வரை அவர்கள் அங்கு போர் பயிற்சி மேற்கொள்வர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.