பெகாசஸ் செயலி வாங்கியதாக அமெரிக்க நாளிதழ் செய்தி, பிரதமர் மீது எதிர் கட்சிகள் தாக்குதல் !!
1 min read

பெகாசஸ் செயலி வாங்கியதாக அமெரிக்க நாளிதழ் செய்தி, பிரதமர் மீது எதிர் கட்சிகள் தாக்குதல் !!

அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை இந்தியா இஸ்ரேலிடம் இருந்து பெகாசஸ் எனும் செயலியை வாங்கியதாக செய்தி வெளியிட்ட நிலையில் இந்திய எதிர் கட்சிகள் அரசு மீது தாக்குதல் தொடுத்துள்ளன.

ஜூலை 2017ஆம் ஆண்டில் பிரதமர் மோடி இஸ்ரேல் சென்ற போது சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான கருவிகள் தளவாடங்கள் வாங்க ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானதாகவும்,

உளவு பாரக்க உதவும் செயலிகள் கருவிகள் மற்றும் ஒரு முக்கிய ஏவுகணை அமைப்பு ஆகியவை இந்த ஒப்பந்தத்தில் அங்கம் எனவும் அச்செய்தி கூறுகிறது.

பெகாசஸ் செயலி உலகின் மிகவும் சக்திவாய்ந்த சைபர் ஆயுதமாக கருதப்படுகிறது இஸ்ரேலை சேர்ந்த NSO குழுமம் இதை தயாரிக்கிறது அமெரிக்கா உட்பட பல நாடுகள் இதை வாங்கி உள்ளன.

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், மெக்சிகோ போன்ற நாடுகளும் இந்த செயலியை வாங்கி சர்ச்சைக்குரிய வகையில் பயன்படுத்திய நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.