மேற்கு எல்லையோரம் அதிகரித்துள்ள பயங்கரவாதிகளின் எண்ணிக்கை !!

  • Tamil Defense
  • January 13, 2022
  • Comments Off on மேற்கு எல்லையோரம் அதிகரித்துள்ள பயங்கரவாதிகளின் எண்ணிக்கை !!

இந்தியாவின் மேற்கு எல்லையோர பகுதியில் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளதாக தரைப்படை தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் நரவாணே கூறியுள்ளார்.

மேலும் அவர் நமது அண்டை நாட்டின் வழிகாட்டுதல் மற்றும் உதவியினால் பல்வேறு முகாம்களில் பயங்கரவாதிகள் ஊடுருவ தயாராக இருப்பதாகவும் ஏற்கனவே ஒரு சில முயற்சிகள் நடைபெற்று உள்ளதாகவும் தெரிவித்தார்.

அதை போல சீன எல்லையை பொறுத்தவரை கடந்த ஜனவரியுடன் ஒப்பிடுகையில் தற்போது நிலைமை சாதகமாக உள்ளதாகவும் வடக்கு பகுதியை பாதுகாப்பதில் அதிக தீவிரம் காட்டி வருவதாகவும் கூறினார்.

இந்த மாதம் இந்தியா மற்றும் சீனா இடையேயான 14ஆவது சுற்று கோர் கமாண்டர்களின் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.