பாகிஸ்தான் பெற உள்ள ஜே-10சி போர் விமானங்களுக்கும் இஸ்ரேலுக்கும் உள்ள தொடர்பு !!

  • Tamil Defense
  • January 5, 2022
  • Comments Off on பாகிஸ்தான் பெற உள்ள ஜே-10சி போர் விமானங்களுக்கும் இஸ்ரேலுக்கும் உள்ள தொடர்பு !!

பாகிஸ்தான் சமீபத்தில் சீனாவிடம் இருந்து 25 ஜே-10 சி ரக போர் விமானங்களை இந்தியாவின் ரஃபேல் போர் விமானங்ஙளுக்கு போட்டியாக வாங்கி ஒரு புதிய படையணியை உருவாக்க உள்ளதாக அறிவித்தது.

ஆனால் பாதுகாப்பு வல்லுனர்கள் இரட்டை என்ஜின், அதிநவீன சண்டையில் நிருபிக்கப்பட்ட ஏசா ரேடார் மற்றும் ஆயுத அமைப்புகளை கொண்ட ரஃபேலுடன் ஒப்பிடுகையில் ஒற்றை என்ஜின் மற்றும் நிருபிக்கப்படாத திறன்கள் கொண்ட J10C பின்தங்கிய விமானம் என கூறுகின்றனர்.

ஆனால் இதில் சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் இந்த சீன ஜே-10 சி ரக போர் விமானம் இஸ்ரேல் சொந்தமாக உருவாக்க முயன்று பின்னர் கைவிட்ட லாவி போர் விமானத்தை அடிப்படையாக கொண்டது என பரவலாக கூறப்படுகிறது.

80களில் இஸ்ரேல் அமெரிக்கா மற்றும் பல மேற்குலக நாடுகள் சீனாவுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்தன. மேலும் இணைந்து ஆயுதம் தயாரிப்பது ஆயுதம் விற்பது போன்ற அளவுக்கு நெருக்கம் இருந்த நிலையில்,

1989ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நிகழ்ந்த தியானன்மென் சதுக்க படுகொலைகள் காரணமாக மேற்குலகம் சீனா உடனான உறவுகளை முறித்து கொண்டது.அந்த வகையில் இஸ்ரேலும் உறவுகளை துண்டித்து கொள்ள அமெரிக்காவால் அழுத்தம் தரப்பட்டு

பின்னர் சீனா தன்னந்தனியாக தனது ஆயுதங்களை உருவாக்கியதும் ஏற்கனவே பெற்ற ஆயுதங்களை ரிவர்ஸ் என்ஜினியரிங் முறையில் தானே உருவாக்கி பயன்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.