ஒரு சீன கப்பல் மற்றும் 10 இங்கிலாந்து தயாரிப்பு ஹெலிகாப்டர்களை படையில் இணைத்த பாக் !!

  • Tamil Defense
  • January 27, 2022
  • Comments Off on ஒரு சீன கப்பல் மற்றும் 10 இங்கிலாந்து தயாரிப்பு ஹெலிகாப்டர்களை படையில் இணைத்த பாக் !!

பாகிஸ்தான் கடற்படையானது நேற்று முன்தினம் கராச்சியில் உள்ள கடற்படை தளத்தில் நடைபெற்ற விழாவில் 1 போர் கப்பல் மற்றும் 10 ஹெலிகாப்டர்களை படையில் இணைத்தது.

பி.என்.எஸ். துக்ரில் எனப்படும் அந்த கப்பல் டைப்-054ஏ ரக ஃப்ரிகேட் ஆகும் மேலும் இது சீன தயாரிப்பு கப்பல் என்பதும் இத்தகைய நான்கு கப்பல்களை சீனா பெற உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அதை போலவே கத்தார் விமானப்படை பயன்படுத்தி வந்த 10 இங்கிலாந்து தயாரிப்பு வெஸ்ட்லேண்ட் சீ கிங் ரக ஹெலிகாப்டர்களையும் படையில் இணைத்தது.

வெஸ்ட்லேண்ட் சீ கிங் ரக ஹெலிகாப்டர்கள் அமெரிக்காவால் தயாரிக்கப்பட்டு பின்னர் தொழில்நுட்ப பரிமாற்ற அடிப்படையில் இங்கிலாந்தால் தயாரிக்கப்படுபவை ஆகும்.